பரூக் அப்துல்லாவை சந்திக்கும் தேசிய மாநாடு குழு

ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து முன்னாள் முதலமைச்சர் பாரூக் அப்துல்லாவை சந்திக்க தேசிய மாநாடு கட்சியில் சார்பில் 15 பேர் கொண்ட குழு இன்று (அக்.6) சந்திக்க இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை தனி பிரதேசமாக பிரிக்கப்பட்டன. இதன் காரணமாக அங்கு கலவரம் ஏற்படுவதை தடுப்பதாக கூறி முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் பிற முக்கிய அரசியல் தலைவர்களை வீட்டு காவலில் வைத்தது மத்திய அரசு.

விளம்பரம்

இதனை தொடர்ந்து ராகுல் காந்தி, வைகோ உட்பட பலர் இவர்களை சந்திக்க முயன்றும் தோல்வியடைந்தனர். இதனால் வைகோ பரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பரூக் அப்துல்லாவை சந்திக்கும் தேசிய மாநாடு குழு 1
பரூக் அப்துல்லா மற்றும் அவரது ஆகான் ஓமர் அப்துல்லா

தற்போது, பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால், 2 மாதங்களாக யாராலும் அவரை பார்க்க இயலாத சூழல் உருவாகி இருந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  காங்கிரஸ், பாஜக தீண்டத்தகாதவர்கள் அல்ல: துஷ்யந்த்

இதனை தொடர்ந்து தேசிய மாநாடு கட்சியினர் அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும், ஓமர் அப்துல்லா ஆகியோரை சந்திக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதற்கு நீண்ட காலமாக அனுமதி வழங்காமல் இருந்ததற்கு, தற்போது சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மாநாடு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏகளை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட குழு இன்று (அக்.6) சந்தித்து முக்கிய ஆலோசனை நடக்க உள்ளது. தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் தடுப்பு காவலில் இருப்பதால், செயல் தலைவர்கள் யாரேனும் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment