
பசுக்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை விட, பெண்கள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள் என அழகி போட்டியில் கலந்துக் கொண்ட இளம் பெண் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில், ‘மிஸ் கோஹிமா’ அழகி போட்டி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது.
இதில், இறுதிச் சுற்றுக்கு தேர்வாகிய அழகிகளிடம், நடுவர் குழு, பல்வேறு கேள்விகளை கேட்டனர். விக்குனுவ் சச்சு என்ற 18, இளம் பெண்ணிடம், ‘பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்பதாக இருந்தால், என்ன கேட்பீர்கள்’ என்று கேட்டனர். அதற்கு அந்த பெண், ‘பசுக்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை விட, பெண்கள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள் என கேட்பேன்’ என்றார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில், பசு பாதுகாவலர்கள் என்று செயல்படும் சிலர், மாட்டிறைச்சி சாப்பிடுவோர், விற்பனை செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதைத் தான், ‘பசு பாதுகாப்பை விட, பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்’ என, மறைமுகமாக, அந்த பெண் குறிப்பிட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் விமர்சனம் பல்வேறு எழுந்துள்ளது. இந்த பெண்ணுக்கு, அழகி போட்டியில் இரண்டாவது இடம் கிடைத்தது.