பிளாஸ்டிக் கழிவுகளின் இறக்குமதிக்குத் தடை!!

பிளாஸ்டிக் கழிவுகளின் இறக்குமதிக்குத் தடை!! 1

மத்திய அரசு இந்திய நாட்டிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகளுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், வங்காளதேசம், அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் போன்ற 25 நாடுகளிலிருந்து இந்திய நாட்டிற்கு சுமார் 1,21,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்படுவதாக இந்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. ஆதலால் இந்தியாவில் மாசு அதிகமாகிவிட்டதாகவும் இதன் மூலம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் காட்டும் எதிர்ப்பினாலும் மத்திய அரசு கடந்த செப்டம்பர் 1ம் தேதியன்று நம் நாட்டில் பிஸாடிக் உபயோகிப்பதற்குத் தடை விதித்திருந்தது.

விளம்பரம்

இதற்கு அடுத்த கட்டமாக அனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் உள்ளூரில் பழைய பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் நிலை ஏற்படும் எனவும் இதனால் நாடு முழுவதும் 40 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலியெதிலீன் டெராப்தலேட்(PET) எனப்படும் பிளாஸ்டிக் வகையே அதிகமாக இறக்குமாதி செய்யப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

விளம்பரம்

Leave a Comment