விளக்கின் அடி பகுதி இருட்டில் மிதக்கிறது! குறுந்தொடர் 1

திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட “தூய்மை இந்தியா” திட்டம் கடந்த 2014ஆம் ஆண்டு காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் இந்த திட்டத்தில் உள்ள மிக பெரிய முரணை நாம் கூர்ந்து கவனித்தால் ஒரு விடயம் புலன்படும். அதாவது எத்தகைய அகிம்சையை காந்தி முன்மொழிந்தாரோ, அதற்கு நேர் மாறான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது தான் அது. அது தான் கும்பல் வன்முறை. அகிம்சையை அப்புறப்படுத்த பல காரணங்களை சொல்லி, வன்முறைக்கு ஆளாகின்றனர். இதன் தொடர்ச்சியாக மனித உயிர் பலிகளும் நடதேறிக் கொண்டிருக்கின்றன.

விளம்பரம்

சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தை சார்ந்த 10 மற்றும் 12 வயதுமிக்க இரு சிறு குழந்தைகள் திறந்த வெளியில் மலம் கழித்தற்காக அடித்து கொலை செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவில் இருக்கும். இவர்கள் வால்மீகி வகுப்பை சார்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விளக்கின் அடி பகுதி இருட்டில் மிதக்கிறது! குறுந்தொடர் 1 1

அதே போல, கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி, இந்தியா பிரதமர் மோடி நியூயார்க் நகரில் சுற்றுசுழலுக்கான பில்கேட்ஸ் விருதினை பெறும்போது, இத்தகைய தாக்குதல் சம்பவம் சுற்று சூழல் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டது. 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் திறந்தவெளியில் மலம் கழித்த பெண்களை படம் பிடிப்பதற்காக சென்றிருந்த அதிகாரிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்த ஜாபர் உசேன் தாக்கப்பட்டதும், அதே ஆண்டு ஜனவரி மாதம் உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தவர்களை தாக்கப்பட்டதும் அவலத்தினும் அவலமாக நடந்தேறியது.

விளம்பரம்
தொடர்புடையவை  அரசு முறை பயணம் வெற்றியடைந்துள்ளது - சென்னை திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி

பாவ்கேடியில் குழந்தைகள் கொலை செய்யப்பட்ட இரண்டாவது நாள் மத்திய அரசு, திறந்த வெளி கழிவு இல்லாததை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு அறிக்கை மூலம் அறிவுறுத்தியது. இந்த அறிக்கை தூய்மை இந்தியா திட்டம் அமல்படுத்தப்படாத இடங்களை கண்டறிய வெறும் வார்த்தைகளை மட்டுமே தாங்கியுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் வெற்றியடைந்து விட்டதாக அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் தீவிரமாக செயல்பட்டது மத்திய அரசு. ஆனால் அது வன்முறையில் முடிந்து மிக பெரிய தோல்வியில் தான் முடிந்துள்ளது.

மும்பை போன்ற பெரு நகரங்களில், தூய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமாக அமைந்து விட்டது என அரசு பகிரங்கமாக அறிவித்திருக்கையில், தாழ்த்தப்பட்ட மற்றும் சமூகத்தில் இருந்து ஒதுக்க/ ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் “திறந்த வெளி மலம் கழித்தல்” இன்னும் பகிங்கரமாகவே நடைபெற்று வருகிறன. இதற்கான காரணங்களை நாம் பெரிய அளவில் கற்பனை செய்து பார்க்க தேவையில்லை. போதிய அளவிலான கழிப்பறைகள் இல்லாதது, தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதது, மேலும் சிறிய குழந்தைகளால் இதனை பயன்படுத்த முடியாதது போன்ற காரணங்களே இத்திட்டம் தோல்வியில் முடிந்ததன் அறிகுறி.

விளம்பரம்
தொடர்புடையவை  பெரும் நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கை பிரதமராக பதிவியேற்கும் ரணில் விக்ரமசிங்க

தொடரும்…

தொகுப்பு: விடுதலை தமிழ்முரசு

விளம்பரம்

Leave a Comment