திரைப்பட தயாரிப்பாளருக்கு வீட்டைப் பரிசாக அளித்த நடிகர் ரஜினிகாந்த்!!

திரைப்பட தயாரிப்பாளருக்கு வீட்டைப் பரிசாக அளித்த நடிகர் ரஜினிகாந்த்!! 1

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது வாக்குறுதியை கடைப்பிடித்து முன்னாள் திரைப்பட இயக்குனர் மற்றும் கதாசிரியரான கலைஞானத்திற்கு ஒரு கோடி ரூபாயில் வீடு ஒன்றை பரிசளித்துள்ளார்.

திரைப்படக் கதாசிரியரான கலைஞானத்திற்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த், அந்த வீட்டில் குத்துவிளக்கேற்றி வைத்தார். பைரவி திரைப்படத்தின் மூலம் தனி கதாநாயகனாக ரஜினிகாந்தை அறிமுகம் செய்து வைத்தவர் கதாசிரியர் கலைஞானம். இந்த 1320 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள தரைமட்ட அடுக்குமாடி குடியிருப்பு, தமிழ்நாட்டின் விரும்பம்பாக்கம் நகரில் அமைந்துள்ளது.

விளம்பரம்

கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தனது 90 வது பிறந்தநாளை முன்னிட்டு, திரைப்படத் துறையில் தனது 50 ஆண்டுகால பங்களிப்பை முன்னிட்டு நடத்தப்பட்ட வாழ்த்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது கலைஞானம் அவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருவதை அறிந்தபோது அவருக்கு ஒரு சொந்த வீட்டை பரிசளிக்கப் போவதாக வாக்குறுதி அளித்திருத்தார்.

ரஜினிகாந்த் கூறியதாவது

விளம்பரம்

“அவர் இன்னும் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார் என்பதை நான் சமீபத்தில் அறிந்தேன். இது வருத்தமளிக்கிறது. (அமைச்சர்) கடம்பூர் ராஜு, முதல்வரிடம் பேசிய பிறகு கலைஞானத்திற்கு ஒரு வீடு கிடைக்கும் என்று கூறினார், அவருக்கு எனது நன்றி. இந்த வாய்ப்பை நான் அரசாங்கத்திற்கு கொடுக்க மாட்டேன். அவரது மூச்சு அவரது உடலை விட்டு வெளியேறும்போது, ​​அது என் வீட்டிலிருந்தே இருக்க வேண்டும்.”

மேலும் அவர்

விளம்பரம்
தொடர்புடையவை  சமந்தா நடிக்கும் "சாகுந்தலம்" படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..!

“அன்புள்ள பாரதிராஜா ஐயா, தயவுசெய்து வீடுகளைத் தேடத் தொடங்குங்கள். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் என் வீட்டில் கழிக்க வேண்டும். கடவுளின் கிருபையால் இந்த செய்தி எனக்கு சிவகுமார் (நடிகர்) மூலம் வந்தது. அவருக்கு நன்றி.”

என்றும் கூறியுள்ளார். அதன் படி ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு வீட்டை பரிசாக அளித்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment