Categories: சினிமா

ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஜய் அண்ணன்! சாந்தனு!!

வெளியிட்டது
ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஜய் அண்ணன்! சாந்தனு!! 1

லோகேஷ் கனகராஜ் இயக்கி திரைக்கு வர இருக்கும் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்திருக்கும் படம், மாஸ்டர். தளபதியின் தீவிர ரசிகன் சாந்தனு பாக்யராஜ், முதல் முறையாக இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் நடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் , “படத்தில் உணர்வுபூர்வமான வகையில் காட்சிகள் நிறையவே இருக்கிறது. எனவே, வழ‌க்க‌ம் போல் இருக்கும் தோற்றத்துடன் விஜய் அண்ணனை திரையில் நம்மால் பார்க்க முடியாது. மேலும் அவர் தன்னைத்தானே மாற்றிக்கொண்டு நடித்ததை படப்பிடிப்பில் பார்த்ததில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விஜய் என்றால் இப்படித்தான் நடிப்பார் என்று உணர்ந்தேன்.அதுமட்டுமல்லாமல் விஜய் அண்ணா ஒவ்வொரு காட்சியிலும் தன்னை வடிவமைத்து காட்சிக்கு தகுந்தபடி வெவ்வேறு மாதிரி நடித்தார்.

மேலும் இது விஜய் படமாக தான் இருக்க வேண்டும். ஆனால், எப்போதும் போல திரைக்கு வரும் விஜய் படமாக இருக்கக்கூடாது என்பதில் இயக்குனர் முடிவெடுக்கவே, வித்தியாசம் காட்டினால்தான் மக்களிடையே படம் ரீச் ஆகும் என்று அவர் உறுதியாக இருந்தார். டெல்லி படப்பிடிப்பில் , ‘வாத்தி கம்மிங்’ என்ற பாடல் காட்சி எடுக்கப்பட்டது. ஒருமுறை விஜய் நடனமாடி முடித்த பின்னர் , படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் கைத்தட்டி விசிலடித்தோம். காரணம், அந்தப் பாடல் காட்சியில் அவர் கொடுத்த நடன அசைவுகள் மற்றும் அணுகுமுறை, ஸ்டைல் எல்லாமே வேறு மாதிரி இருந்தது” என்று கூறியுள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்