Categories: உலகம்

இந்திய சுற்றுலாப் பயணி பூட்டானின் புண்ணிய தலத்தின் மேல் நின்றதால் பரபரப்பு!!

வெளியிட்டது
இந்திய சுற்றுலாப் பயணி பூட்டானின் புண்ணிய தலத்தின் மேல் நின்றதால் பரபரப்பு!! 1

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி அபிஜித் ரத்தன் ஹஜாரேவின் பூட்டானிலுள்ள ஒரு புண்ணிய தலத்தின் மேல் ஏறி நிற்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் பூட்டான் ராயல் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

ஒரு பூட்டானிய தலைவர் கொண்ட 15 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகளுள் ஒருவரான அபிஜித் ரத்தன் ஹஜாரே பூட்டானின் டோலுச்சாவில் உள்ள தேசிய நினைவு சார்டனின் உச்சியில் நின்றதால் அந்நாட்டு போலீஸ் அவரின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. மேலும் விசாரணை முடியும் வரை ஓட்டலில் தங்குமாறு கூறப்பட்டுள்ளது. உள்ளூர் செய்தி நிறுவனம் “பூட்டானியர்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளது. மேலும் திம்புவை புனகாவுடன் இணைக்கும் டோச்சுலா பாஸ் அருகே அந்த 15 சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அவர்களின் பூட்டானியத் தலைவர் தனக்குத் தெரியாமல் இந்த நிகழ்வு நடந்ததாக கூறினார்.

ஹஜாரே ஒரு பூட்டானிய தச்சுர் ஜம்பேயின் உதவியுடன் ஏணியில் ஏறி, சோர்டனின் மேல் நின்று படங்களுக்கு போஸ் கொடுத்தார். சோர்டனில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டிருந்த ஜம்பேயும் படங்களுக்கு போஸ் கொடுத்தாக தெரியவந்துள்ளது. தற்போது அவரைப் பூட்டானின் ராயல் போலீஸ் கண்காணித்து வருகின்றனர். புத்தரின் இருப்பைக் குறிக்கும் இந்த சோர்டன் புத்த மதத்தில் ஒரு முக்கியமான மத நினைவுச்சின்னமாகக் கருதப்படுகிறது.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்