லா லிகா சாம்பியனான பார்சிலோனா கிளப் நடப்பு சீசனில் ஒரு பில்லியன் யூரோக்களை (1.10 பில்லியன் டாலர்) வருவாயாக ஈட்டும் முதல் கிளப்பாக மாறும் என தெரிவித்துள்ளது.
கிளப் கால்பந்து போட்டிகளில் முன்னணி அணியாக பார்சிலோனா இருந்து வருகிறது. இந்த அணியில் தான் உலகின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி விளையாடி வருகிறார்.
கடந்த சீசனில் 990 மில்லியன் யூரோக்களை வருமானங்களாக ஈட்டிருந்த பார்சிலோனா நடப்பாண்டில் இவை 1.047 பில்லியனாக அதிகரிக்கும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில் வரிகள் செலுத்திய பிறகு 11 மில்லியன் யூரோக்களின் வரையிலான இலாபத்தை எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த கிளப் 217.2 மில்லியன் யூரோ கடனின் இருப்பதாகக் கூறியுள்ளது.

இதே வேளையில், மற்றோரு நட்சத்திர வீரரான நெய்மர் குறித்து தலைமை அதிகாரி கூறும் போது, “நெய்மர் விவகாரத்தில் நாங்கள் முயன்றதை செய்து பார்த்தோம். ஆனால் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணி அவரை விற்க தயாராக இல்லை. நாங்கள் சிறந்த அணியை எதிர்பார்க்கிறோம். அதேபோல் நிலையான அணியாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்.
கடந்த 2107ஆம் ஆண்டு வரை பார்சிலோனா அணியில் விளையாடி வந்த நெய்மார், அதன் பிறகு பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் கிளப்பிற்கு விளையாடி வருவது குறிப்பிடதக்கது.