இன்று தமிழகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்!!

இன்று தமிழகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்!! 1

நவராத்திரியின் ஒன்பதாம் மற்றும் கடைசி நாளான இன்று தமிழகமெங்கும் ஆயுத பூஜை (சரஸ்வதி பூஜை) சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பல்வேறு வீடுகளிலும் நிறுவனங்களிலும் ஆயுத பூஜையை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகைதான் நவராத்திரி. கல்வி மற்றும் தொழிலில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்குகின்றனர். இவ்வாறு கொண்டாடப்படும் பண்டிகை சரஸ்வதி பூஜை அல்லது ஆயுத பூஜை என்று அழைக்கப்படுகிறது.

விளம்பரம்

ஆயுத பூஜை கொண்டாடப்படும் வீடுகளில் மற்றும் நிறுவனங்களில் சரஸ்வதி தேவிக்கு பள்ளிக் குழந்தைகளின் பாடப் புத்தகங்கள், பயன்படுத்தப்படும் கருவிகள், அவல், பொரி, சுண்டல் ஆகியவற்றை சரஸ்வதிக்கு படைத்து வழிபடுகின்றனர். பள்ளிகளிலும் சரஸ்வதி பூஜைக்கு முந்தைய நாளிலேயே பூஜையை கொண்டாடுகின்றனர். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

“ஆயுத பூஜை” மற்றும் “விஜயதசமி” திருநாளை பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் கழகம் சார்பில் உளம் கனிந்த இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்’

விளம்பரம்

என்று குறிப்பிட்டுள்ளனர். டுவிட்டரிலும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையவை  யார் கடவுள்...எங்கு உள்ளார்...கடவுளை குறித்து மனிதனின் புரிதல் சரிதானா

வடமாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “துர்காஷ்டமியின் தெய்வமான மகாகவுரி நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல் அதிர்ஷ்டத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும்” என்று கூறியுள்ளார்.

விளம்பரம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “தீமையை நன்மை வெற்றி கொண்ட திருநாள் இது என்றும், துர்காதேவி ஆசிமழை பொழிந்து மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வந்து சேர்க்கட்டும்”என்று குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment