உலக வுசூ போட்டியில் இந்தியாவிற்குத் தங்கப்பதக்கம்!!

வெளியிட்டது
உலக வுசூ போட்டியில் இந்தியாவிற்குத் தங்கப்பதக்கம்!! 1

சீனாவின் தலைநகரம் ஷாங்காயில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற உலக வுசூ (தற்காப்புக் கலை) சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

15வது உலக வுசூ சாம்பின்ஷிப் போட்டி ஷாங்காயில் நடைபெற்றது. செவ்வாய் அன்று நடைபெற்ற அதன் அரைஇறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் காசன் இக்ரோமோவை 2-0 என்ற கணக்கில் இந்தியாவின் பிரவீன் குமார் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பின்பு நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஆண்களுக்கான ‘சன்டா‘ 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பிரவீன் குமார் என்பவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரஸ்செல் டியாசை 2–1 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் அவர் இப்போட்டியில் தங்கப்பதக்கம் இந்தியாவின் முதல் ஆண் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதற்கு முன்பு 2017ம் ஆண்டில் உலக வுசூ சாம்பின்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 75 கிலோ பிரிவில் இந்தியாவின் பூஜா காடியன் என்பவர் சன்டா போட்டியில் ரஷ்யாவின் எவ்ஜெனியா ஸ்டெபனோவாவை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

வுசூ சன்டா என்பது ஒரு தற்காப்புக் கலை, இது முழு தொடர்பு கிக் பாக்ஸிங்கை ஒருங்கிணைக்கிறது, இதில் நெருங்கிய தூர குத்துக்கள் மற்றும் உதைகள் மல்யுத்தம், தரமிறக்குதல், வீசுதல், துடைத்தல் மற்றும் கிக் கேட்சுகள் ஆகியவை அடங்கும்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்