கார்பரேட் வரியை குறைத்த நிர்மலா சீதாராமன்! உற்பத்தி பெருக வாயப்பு இருக்குமா?

வெளியிட்டது
கார்பரேட் வரியை குறைத்த நிர்மலா சீதாராமன்! உற்பத்தி பெருக வாயப்பு இருக்குமா? 1

பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதங்களை குறைப்பதற்கான அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். இதனால் அரசுக்கு, கூடுதலாக ரூ .1.45 லட்சம் கோடி செலவுபிடிக்கும். ஒரு நிறுவனம் நிதியாண்டில் இருந்து எந்தவிதமான விலக்குகளையும், சலுகைகளையும் கொள்ளாவிட்டால் 22 சதவிகிதம் வருமான வரி செலுத்த வாய்ப்புள்ளது .

இந்த நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் உட்பட அனைத்து கார்பொரேட் வரியும், சேர்த்து, 25.17 சதவீதம் இருக்க வாய்ப்புள்ளது. பெருநிறுவனங்களுக்கு தற்போது உள்ள கார்பொரேட் வரி 30 சதவீதமாக உள்ளது. அதனால் இது நிறுவனங்களுக்கு லாபமாகும். அதே சமயம் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு வரி 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு புதிய நிறுவனங்களுக்கு இது வாய்ப்பாக அமையும். இதன் காரணமாக முதலீடு அதிகரிக்க வாய்புகள் உள்ளது எனவும் தெரிவித்தார். வ‌ரி குறைக்கபட்ட நிலையில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்