Categories: கல்வி

கிராஜுவேட் விசாவில் திருத்தம்: இங்கிலாந்து அறிவிப்பு!

கடந்த 2012ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட கிராஜுவேட் விசாவினை மீண்டும் அறிமுகப்படுத்த இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கல்லூரி முடித்தவுடன் இரண்டு வருட காலத்திற்கு அங்கேயே இருந்து வேலை தேடிக்கொள்ளும் வாய்ப்பு அங்கு பயில செல்லும் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

பெரும்பான்மையான மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்று பட்டம் பெற்று, அங்கேயே வேலை பணிபுரிவது மிக பெரிய கனவாக இருக்கிறது. ஆனால் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் தெரசா மே உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது, உள்ளூர் மாணவர்களின் வேலைவாய்ப்பை பிற நாட்டவர் பறித்துவிடுவதாக எழுந்த சர்ச்சையால் கிராஜுவேட் விசாவில் இருந்த சலுகைகளை விலகிக்கொண்டார். இதனால் பிறநாட்டு மாணவர்கள் கல்லூரி படிப்பு முடிந்தவுடன், நான்கு மாதங்களுக்குள் அந்நாட்டை விட்டு வெறியேறும் வண்ணம் விசாவில் திருத்தம் செய்யப்பட்டது. இதனால், பிறநாட்டவர்களுக்கு குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு சிக்கல் எழுந்தது. ஆனால் தற்போது மீண்டும் பழைய விசா முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தபின் 2 ஆண்டுகள் பட்டமேற்படிப்பு படிக்கலாம் அல்லது வேலைக்கு செல்லலாம்.இதனால் தகுதியான மாணவர்கள் படித்து முடித்தபின் வேலை செய்யவும், வேலை தேடவும் அனுமதிக்கிறது.

இதுகுறித்து, இங்கிலாந்துக்கான இந்தியத் தூதர் டோமினிக் ஆஷ்குயித் கூறுகையில், இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். மாணவர்கள் இனிமேல் இங்கிலாந்தில் அதிகமான காலம் செலவிடலாம். தங்களின் படிப்பு முடித்தபின் திறமைக்கு ஏற்ற அனுபவத்தை வேலையில் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய மாணவர்களின் அதிக அளவிலான சேர்க்கையை தடுக்கும் வண்ணம் மாற்றம் கொண்டு வந்த பின்னும், 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் இங்கிலாந்துக்கு படிப்பதற்காக 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் சென்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 42 சதவீதம் அதி்கமாகும் என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்