Categories: அரசியல்

ஜம்மூ காஷ்மீர்: இயல்புநிலையை மீட்டெடுக்க அறிவுரை!

தேசிய நலத்தைக் கருத்திக்கொண்டு ஜம்மூ காஷ்மீர் மாநில விவகாரத்தில் இயல்புநிலையை மீட்டெடுக்குமாறு உச்சநீதி மன்றம் மத்திய மற்றும் மாநில ஆளுநருக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நிலையை சமீபத்தில் ரத்து செய்து உத்தரவிட்டது மத்திய அரசு. இதனை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் உருவானது. தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, காஷ்மீர் டைம்ஸ் செய்தி நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் அனுராதா பாசின், உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், 370 வைத்து பிரிவை ரத்து செய்த பின்னர் தகவல் தொடர்பு நிலைகள் துண்டிக்கப்பட்டது. இதனால் தன்னுடைய செய்தித்தாளை வெளியிட முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.

ஜம்மூ காஷ்மீர்: இயல்புநிலையை மீட்டெடுக்க அறிவுரை! 1
காஷ்மீர் டைம்ஸ்

இம்மனுவை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதிகள் எஸ் ஏ போப்டே மற்றும் எஸ் ஏ நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. “இவ்விகாரத்தில் ஜம்மூ பிரதேசத்தின் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அம்மாநில உயர் நீதி மன்றத்தாலே நடவடிக்கை எடுக்க முடியும். எனவே மாநிலத்தின் இயல்பு நிலைய மீட்டெடுக்க இரு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ள அம்மர்வு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாசினின் மனுவை எதிர்த்த மத்திய அரசு, காஷ்மீரை தலைமையாகக் கொண்ட இயங்கும் செய்தித்தாள்கள் அனைத்தும் செயல்படுவதாகவும், மாநிலத்தின் பத்திரிகையாளர்களுக்கு அரசாங்கம் அனைத்து வகையான உதவிகளையும், அளித்து வருவதாக தெரிவித்துள்ளது.

“தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ஊடகங்கள் சென்று வர அனுமதியும், அவர்கள் வசதிக்காக தொலைபேசிகள் மற்றும் இணையத்தை பயன்படுத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகின்றன. மேலும் “தூர்தர்ஷன் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.”

ஜம்மு-காஷ்மீரில் மாநிலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதிலிருந்து ஒரு புல்லட் கூட சுடப்படவில்லை என்று மத்திய அரசு சார்பாக ஆஜரான தலைமை அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்