ஜி. 7 உச்சிமாநாடு நடக்கும் இடம் மாற்றப்பட்டது!

ஜி. 7 உச்சிமாநாடு நடக்கும் இடம் மாற்றப்பட்டது! 1

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டோனாலட் டிரம்ப் அவர்கள் 46வது ஜி. 7 உச்சிமாநாட்டைத் தனது கோல்ப் ரிசார்டில் நடத்தவுள்ளதாக கூறியிருந்தார். நான்கு கோல்ப் மைதானங்கள் மற்றும் 643 விடுதிகளைக் கொண்ட நேஷனல் டோரல் மியாமி விடுதி சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சகல வசதிகளும் உள்ளடக்கிய இந்த ரிசார்டில் வருகிற 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மாநாட்டை நடத்த திட்டமிட்டிருப்பதாங கடந்த 17ம் தேதி தெரிவித்திருந்தார்.

ஆனால் எதிர்கட்சிகாளர்களான ஜனநாயக கட்சியினர் டிரம்ப் அவர்கள் தனது சொந்த நன்மைக்காவும் லாபத்துக்காகவும் தன்னுடைய அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தி ஜி. 7 உச்சிமாநாட்டைத் தனது கோல்ப் ரிசார்டில் நடத்துகிறார் என்று கூறியுள்ளனர். மேலும் அவருடைய சொந்த குடியரசு கட்சியில் உள்ள சிலரும் அவரை விமர்சித்தனர்.

விளம்பரம்

இந்நிலையில் தொடர் விமர்சனங்கள் வருகிறதால் 46வது உச்சிமாநாட்டை தனது சொகுசு நேஷனல் டோரல் மியாமி விடுதியில் ( கோல்ப் ரிசார்ட்) நடத்தவிருப்பதாகக் கூறிய அவர் தனது திட்டத்த்தை கைவிடப்போவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது,

தொடர்புடையவை  ஜப்பானை தாக்கிய "ஹகிபிஸ் புயல்"!!

“ஜனநாயக கட்சியினர் மற்றும் ஊடகங்களின் விரோதமான போக்கு காரணமாக எனது யோசனையை மாற்றி அமைக்கிறேன்”

விளம்பரம்

மேலும் அவர் கூறியதாவது,

“2020 ஆம் ஆண்டில் ஜி -7 க்கான ஹோஸ்ட் தளமாக டிரம்ப் நேஷனல் டோரல், மியாமியை நாங்கள் இனி கருத்தில் கொள்ள மாட்டோம். கேம்ப் டேவிட் சாத்தியம் உள்ளிட்ட மற்றொரு தளத்திற்கான தேடலை உடனடியாகத் தொடங்குவோம். ஜி -7 தலைவர்களுக்கு விருந்தளிப்பதற்காக மியாமியில் உள்ள டிரம்ப் நேஷனல் டோரலைப் பயன்படுத்துவதன் மூலம் நம் நாட்டிற்கு மிகவும் நல்லது என்று நினைத்தேன்.”

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment