திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாக் சவாரி உற்சவம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாக் சவாரி உற்சவம்!! 1

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாக் சவாரி உற்சவம் இன்று கோலாகலமாக நடைபெற்று வந்தது. இந்த உற்சவத்தில் மாலையை அனந்தாழ்வாருடைய அவதாரமான மகிழ மரத்துக்கு சாத்துவது வழக்கமான நிகழ்வாகும்.

திருப்பதியின் ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மலையப்ப சுவாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரத்தில் அலங்கரிக்கப்பட்டு நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

விளம்பரம்

அதனை அடுத்து இன்று திருமலையில் உள்ள அனந்தாழ்வார் நந்த வனத்தில் பாக் சவாரி உற்சவம் நடைபெற்றது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

உற்சவர் மலையப்பசாமியை அனந்தாழ்வார் தோட்டத்துக்குக் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து உற்சவர் மலையப்பஸ்வாமிக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.அடுத்து மலையப்பசாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளில் ஒரு மாலையை அனந்தாழ்வாரின் மகிழ மரத்துக்கு அணிவிக்கப்பட்டது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment