நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் டீ கடைக்காரின் மகள் !!

மதுரை மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்த வரும் தான்யா தஷ்னம் நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளார்.

நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் டீ கடைக்காரின் மகள் !! 1

தான்யா தஷ்னம் தந்தை ஜாபர் உசைன் என்பவர் மதுரையில் டீ கடை ஒன்றை நடத்தி வருகிறார், தாய் சிக்கந்தர் ஜாபர் அவர் படிக்கும் அதே பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். தான்யா தஷ்னம், இவருக்கு சிறு வயது முதலே அறிவியல் பாடத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதன் மூலம் கோ 4 குரு என்ற நிறுவனம் நடத்திய அறிவியல் போட்டியில் கலந்துக் கொண்டு நாசா செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.கோ 4 குரு என்ற நிறுவனம் வருடம் வருடம் அறிவியல் போட்டியை நடத்தி வருகிறார்கள். இதில் வெல்லும் மாணவர்களுக்கு நாசா விண்வெளி மையம் அறிவியல் ஆய்வாளர்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவர் அதன் வகையில் தமிழகத்தை சார்ந்த இந்த மாணவி மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விளம்பரம்

இதையடுத்து, இவருடன் ஆந்திர மாநிலத்தில் சாய் புஜிதா, மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அலிபக் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நாசா விண்வெளி மையம் அறிவியல் ஆய்வாளர்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள்.

தொடர்புடையவை  காலாண்டு விடுமுறை ரத்து இல்லை, மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!!

இதுகுறித்து, தான்யா தஷ்னமிடம் கேட்ட போது எனக்கு சிறு வயதிலிருந்தே அறிவியல் பாடத்தில் ஆர்வம் உள்ளதாகவும் எனக்கு மறைந்த அறிவியல் அறிஞர் ஏ. பி. ஜே அப்துல் கலாம் தான் எனக்கு உத்வேகம் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனக்கு அறிவியல் மீது ஆர்வம் உள்ள காரணத்தினாலே நான் கோ 4 குரு என்ற வலைத்தளத்தில் பதிவு செ‌ய்‌து “என் ஹீரோ” என்ற தலைப்பில் அப்துல் கலாம் பற்றி எழுதினேன் எனவும் கூறியுள்ளார்.நாசா அமைப்பின் ஓய்வு பெற்ற அறிவியல் அறிஞர் டான் தாமஸ் அவர்களை பேட்டி ஒன்றிற்கு அழைத்த போது இவரை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது தான்யா தஷ்னம் கூறிய பேட்டியில், எனக்கு நாசா ஆய்வு மையத்திற்கு செல்வது நீண்ட நாள் கனவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது எனவும், அப்துல் கலாம் போல் அறிவியல் அறிஞர் ஆவாது தான் என் கனவு என்றும் கூறினார்.

விளம்பரம்

தேர்வு செய்யப்பட்ட அனைவரும் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நாசா அறிவியல் அறிஞர்களை சந்திப்பார்கள் என கூறப்படுகிறது.

தொடர்புடையவை  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர்கள்! தேனி மருத்துவ கல்லூரி முதல்வரிடம் விசாரணை!!

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment