Categories: சினிமா

பிகில் இசை வெளியீட்டு விழாவில் சுபஸ்ரீ விவகாரம் குறித்து விஜய் பேச்சு!!

வெளியிட்டது
பிகில் இசை வெளியீட்டு விழாவில் சுபஸ்ரீ விவகாரம் குறித்து விஜய் பேச்சு!! 1

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம், ‘பிகில்’. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில், நடிகர் கதிர், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க எப்போதும் போல் இப்படத்துக்கும் பாடலாசிரியர் விவேக் பாடலை எழுதியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் இப்படத்தின் சிங்க பெண்ணே ,உனக்காக பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பிளக்ஸ் பேனர்கள் என எதுவும் வைக்கப்படவில்லை. பேனரால் சமீபத்தில் சுபஸ்ரீ என்பவர் உயிரிழந்த நிலையில், இந்த விழாவை பேனர்கள் வைக்காமல் நடத்தப்பட்டிருந்தது. முன்னதாக ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸார் லேசாக தடியடி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபனா, `மாநகரம்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் ரம்யா தொகுத்து வழங்கினர்.

ரஹ்மானின் இசை கச்சேரிக்கு பிறகு இயக்குநர் அட்லி பேசிய போது , “தெறியை விட இரண்டு மடங்கு மெர்சல். மெர்சலை விட மூன்று மடங்கு பெரிதாக இருக்கும் பிகில் என்றார். என்னை வேற நடிகர்கள் கூடவும் படம் பண்ணுங்கன்னு விஜய் அண்ணா சொன்னார். ஆனால், நான் எந்த கதை எழுதினாலும், எனக்கு மனதிற்கு முதலில் தோன்றும் நடிகர் அவர்தான். மெர்சல் படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் நிறைய வந்தன. இருந்தாலும் என்னுடய லக்கி நடிகர் விஜய் அண்ணாதான். என் அண்ணன விட்டுட்டு நான் எப்படி வெளியே போவேன். அவர் இல்லைனா நான், என்னோட வளர்ச்சி எல்லாம் ஒண்ணுமே இல்லை என்று கூறியுள்ளார். கமர்சியல் படம் , விளையாட்டு படம் என்பதைத் தாண்டி உங்களுக்கு பிடிச்ச படமா பிகில் இருக்கும் என படத்தை பற்றி கூறியுள்ளார்.அவரது நிறம் பற்றி வெளியாகும் ட்ரோல் குறித்து எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த அவர், “இங்கிலீஷும் ஹிந்தியும் வெறும் மொழிகள் மட்டும்தான்; அதுவே தகுதி இல்ல. அதுமாதிரி கருப்பும் ஒரு கலர் அவ்ளோதான்” என்று கூறியதுடன் டீசர் அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே வெளியாகும் எனவும் கூறினார்.

இதனையடுத்து மேடை ஏறிய விஜய், “லைஃப் ஃபுட்பால்” கேம் மாதிரி. நம்மலாம் கோல் அடிக்க ஆசைப்படுவோம். அதைத் தடுக்க ஒருகூட்டமே வரும். நம்மகூட இருக்குறவனே சேம்சைட் கோல் போட்ருவான். யாரோட அடையாளத்தையும் எடுத்துக்கிடாதீங்க. உங்களுக்குனு ஒரு அடையாளத்தை கொண்டுவாங்க. புடிச்சா எடுத்துக்குங்க, இல்லைனா விட்டுருங்க. உலகத்துலயே உழைச்சவனை மேடையில் ஏத்தி அழகு பார்க்குற முதலாளி ரசிகன்தான். வெறித்தனம் பாட்டுக்காக ஒரு சாம்பிள் பாடி ரஹ்மான் சாருக்கு அனுப்பிவிட்டேன். ஆனால் அவர் மும்பைக்கு சென்று விட்டார்.

ஒருவேளை நான் பாட வேண்டானு சொல்லிட்டாங்க போலன்னு நான் நினைச்சேன். ஆனால், அட்லி தான் போன் பண்ணி ரஹ்மான் சார் ரெக்கார்டிங்க்கு கூப்பிட்டதா சொல்லும்போதுதான் எனக்கே தெரிஞ்சது, அரசியல்ல புகுந்து விளையாடுங்க; ஆனா விளையாட்டுல அரசியல் பாக்காதீங்க. சுபஸ்ரீ விவகாரத்தில் டுவிட்டரில் ஒரு ஹாஷ்டாக் கொண்டுவந்திருந்த நல்லா இருந்திருக்கும் என கூறிய அவர், யார் மேல பழிபோடுறதுனு தெரியாம லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுறாங்க. யாரை எங்கு உட்கார வைக்கணுமோ… அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும்..” என்று பேசினார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்