வெங்காயம் இறக்குமதி: உள்நாட்டு பொருளாதாரத்தை பாதிக்கும்!

வெங்காயத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வெங்காய சந்தையில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது வெங்காய விளைச்சல் குறைவாக இருப்பதால், விலை அதிகரித்துள்ளது. இதனால் வெங்காய விலையைக் கட்டுப்படுத்த, சீனா, பாகிஸ்தான், எகிப்து, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மெட்டல் மின்னரல்ஸ் டிரேடிங் காப்பரசஷன் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டு, அங்கிருந்தே வெங்காய இறக்குமதியை மத்திய அரசு ஆதரிக்கிறது. இது என்ன மாதிரியான நிலைப்பாடு என விவசாயச் சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளது.

“இம்முடிவு, நுகர்வோர்க்கு ஆதரவு சார்பையும், உற்பத்தியாளர்களுக்கு எதிரான சார்பையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற காரணங்களே விவசாய பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் இருப்பதன் காரணம்”

கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுடனான அணைத்து வர்த்தக உறவையும் இந்தியா நிறுத்திக்கொண்டது. அதற்கு முன்னதாக பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 சதவிகிதம் வரி விதித்திருந்தது. ஆனால்,தற்போது இந்த இறக்குமதி முடிவால் இந்தியா இரண்டு விடயங்களைச் செய்ய வேண்டும்.

  1. இறக்குமதி செய்ய உகந்தவாறு வரியை எளிமைப்படுத்த வேண்டும்.
  2. பாகிஸ்தான் அரசிடம் ஏற்றுமதியை அனுமதிக்குமாறு கோரிக்கை இடப்பட்ட வேண்டும்.

ஆனால், வாக்காளர்களிடம் வரவேற்பைப் பெறாது என்ற காரணத்தினால், இவை இரண்டும் சாத்தியமுள்ளதாகத் தோன்றவில்லை.

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குவிண்டால் ஒன்றுக்கு 50 சதவிகிதம் உயர்ந்து சந்தை விலை ரூ.1,802 ஆக இருந்தது. மேலும் இது செப்டம்பர் மாதத்தில், ரூ.2267 ஆக உயர்ந்தது. இதன் விளைவாக தற்போது வெங்காய விலை ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையாகுகிறது.

இதுகுறித்து அரசியல் ஆய்வாளரும், முன்னாள் ஆம் ஆத்மி தேசிய குழு உறுப்பினருமான யோகேந்திர யாதவ் கூறுகையில், இது முழுக்க நகரத்தில் வாழும் மக்களுக்குச் சாதகமான முடிவாகும். வெங்காய விலை சந்தையில் வீழ்ச்சியடைந்த போது மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள வில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

“வரும் நவம்பர் மாதம் முதல் வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதே காலகட்டத்தில், நம் நாட்டிலும் வெங்காயம் அறுவடையும் நடைபெறும். இந்நிலையில் இம்முடிவு வெங்காய உற்பத்தியாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும்” ராஜு, விவசாயச் சங்கத் தலைவர்.

கடந்த டிசம்பர் மாதம், விவசாயி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு 1064 ரூபாய் பணத்தை மணி ஆர்டர் மூலம் அனுப்பியிருந்தார். அது அந்த விவசாயி 750 கிலோ வெங்காயத்தை விற்றதில் பெற்ற பணமாகும். அப்போது, ஒரு குவிண்டால் வெங்காயம் உற்பத்தி செய்ய ரூ.900 தேவைப்பட்டது. ஆனால் சந்தையில் அதன் மதிப்பு ரூ.300 ஆக இருந்தது. இவ்வாறு இருக்கையில், வெங்காய விலை வீழ்ச்சியடைந்த போது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது இறக்குமதி செய்ய முடிவெடுத்திருப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது.

“எப்போது சந்தை விலை வீழ்ச்சி அடைகிறதோ அப்போதெல்லாம், விவசாயிகளே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சந்தையில் மதிப்பு சற்று உயர்ந்து விவசாயிகள் லாபம் பார்க்கத் தொடங்கினாலும், அரசு உடனடி நடவடிக்கையாக இது போன்று முடிவுகளை எடுக்கிறது. இது தான் நமது அரசாங்கத்தின் செயல் நிலை”  எனப் பொருளாதார வல்லுநரான  தேவிந்தர் விமர்சித்துள்ளார்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்று விட்டதாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பெருமிதம் கொண்டுள்ளது. மேலும், இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு, பணவீக்கம் ஒரு பிரச்சினையாக இல்லாத ஒரே தேர்தல் இதுதான் என்று நரேந்திர மோடி தற்பெருமையோடு  பேசினார். சில்லறை பணவீக்கத்தை மீண்டும் தலைதூக்கத் தனது அரசாங்கம் அனுமதிக்கவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

ஆனால் உற்பத்தி வரவால் ஏற்பட்ட விலை வீழ்ச்சியை மீட்டெடுக்கவோ, விவசாயிகளின் பாதிப்பை ஈடு செய்யவோ மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

உணவுப் பொருட்கள் விலைக் குறியீட்டின் முக்கிய அங்கமாக இருப்பதால் விவசாயிகள் அதிக பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நமது நாட்டில் உணவு துறையின் பணவீக்கம் பல காலாண்டுகளாகச் சரிந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் 2016 முதல் 2018 நவம்பர் வரையிலான உணவு நுகர்வு வீழ்ச்சியைக் கண்டதாக இந்தியன் எஸ்பிரெஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. அதே போல இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில், வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலை வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதால், உணவு துறை கடுமையான  பணவீக்கத்தைச் சந்திருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்தது.

பணவீக்கத்தைச் சமாளிப்பதற்காக 2 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வது சிறிய அளவே பயனளிக்கும் நடவடிக்கையாகும். ஆனால்  பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையின் நோக்கம் விவசாயிகளையும்,  இந்தியப் பொருளாதாரத்தையும் ஒருங்கே பாதிப்படையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இக்கட்டுரை தி.வயர் வலைசெய்தி பக்கத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையின் தமிழாக்கமாகும்.

ஆங்கிலத்தில்: கபீர் அகர்வால்
தமிழில்: தமிழ்முரசு

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

View Comments

  • வெங்காயக்திற்க்கு இருக்கும் மதிப்பு கூட நம்ம அரசாங்கத்திற்க்கு இல்ல

புதிய செய்திகள்