நாளுக்கு நாள் மாறும் வாக்குகள்.! முதல் 2 இரண்டங்களை தட்டி தூக்கும் விச்சு & அச்சு.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி சுமார் 65 நாட்களை நெருங்கிவிட்டது. தற்போது இந்த சீசன் இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பத்து போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், 13 போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். பத்தாவது வாரம் என்பதால் அடுத்தடுத்து இரண்டு நபர்களை பிக் பாஸ் வெளியேற்றலாம் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த வார கேப்டனாக விஷ்ணு பதவியேற்றிருக்கும் நிலையில், பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீடு போர்க்களமாக மாறி இருக்கிறது. சண்டையை தீர்த்து வைக்கும் இடத்தில் இருக்கும் கேப்டனே சண்டைக்கு மூலக் காரணமாக இருப்பதால் தற்போது ஆட்டம் மிகவும் சூடு பிடித்திருக்கிறது.

நாளுக்கு நாள் மாறும் வாக்குகள்.! முதல் 2 இரண்டங்களை தட்டி தூக்கும் விச்சு & அச்சு.! 1
கேப்டன் ஆன உடனேயே ஸ்மால் பாஸ் வீட்டிற்கு ஆறு பேரை விஷ்ணு அனுப்பியிருந்தார். அதில் பூர்ணிமா, விஜய், விக்ரம், நிக்சன், ரவீனா மற்றும் அனன்யா ஆகிய ஆறு பேரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி இருந்தார். இதில் நிக்சன் மட்டுமே இந்த வார நாமினேஷனில் சிக்கி இருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாயா, பூர்ணிமா, விக்ரம் ஆகியோர் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கின்றனர். அதேபோல தினேஷ், அர்ச்சனா, விசித்ரா, மணி ஆகிய நான்கு பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்து நாமினேஷனிற்கு தேர்வாகி இருக்கின்றனர். இந்த வாரம் மொத்தம் ஐந்து பேர் மட்டும் நாமினேஷனில் சிக்கி இருப்பதால் யார் வெளியேறப் போகிறார்கள் என்கிற பரபரப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


பலரும் கண்டன்ட்டே கொடுக்காத மணியை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரவீனாவுடன் மட்டுமே நேரத்தை செலவிடும் வரும் அவர் வேறு எந்த விதமான கன்டென்டுகளையும் கொடுப்பதில்லை. டாஸ்க்கில் கூட ஆக்டிவாக பங்கேற்று வெற்றி பெறுவதில்லை என்கிற குற்றச்சாட்டு அவர் மீது இருந்து கொண்டே இருக்கிறது. அதேபோல் நிக்சனின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. தேவையில்லாமல் சண்டையிடுவது, அதீதமாக வார்த்தைகளை பிரயோகப்படுத்துவது என்று நிக்சனின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் எரிச்சலை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வாக்கெடுப்பு தொடங்கியது முதலே அர்ச்சனா, விசித்ரா, தினேஷ் ஆகியோர் முன்னணியில் இருந்து வருகின்றனர்.


வாக்குகள் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடனே நடைபெற்று வருகிறது. சில சமயம் விசித்ரா மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறார். அதேபோல தினேஷும் அவ்வப்போது பின்னுக்கு செல்வதும், பின்னர் முன்னேறி வருவதுமாக இருந்து வருகிறார். ஆனால் அர்ச்சனா வலுவாக முதலிடத்திலேயே தனது இருப்பை பதிவு செய்திருக்கிறார். இப்படியாக வாக்கெடுப்பு நிகழ்ந்து வரும் நிலையில் நிக்சன் ஆரம்பம் முதலே கடைசி இடத்தை பிடித்து பின்தங்கி இருக்கிறார். எனவே நிக்சன் இந்த வாரம் கண்டிப்பாக வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நிக்சனின் வெளியேற்றத்திற்கு அவரது ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வலுவான பிஆர் டீம் கிடையாது, பணம் கிடையாது, எளிய குடும்பத்தில் இருந்து வந்ததால் நிக்சனை தான் வெளியேற்றுவார்கள் என்ற குற்றச்சாட்டையும் கூறி வருகின்றனர்


நிக்சன் வெளியேறாத பட்சத்தில் மணியை வெளியேற்ற பிக் பாஸ் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. மணி அல்லது ரவீனா இருவரில் ஒருவர் வெளியேறினால் தான் மற்றொருவர் சிறப்பாக விளையாடுவார் என்கிற எண்ணமும் பரவலாக ரசிகர்களிடையே காணப்பட்டு வருகிறது. நீங்களும் நமது இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ள கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி வாக்களிக்கவும்..! https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்