பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த வார நாமினேஷனில் மூன்று பேர் மட்டுமே சிக்கி இருந்தனர். அதில் சரவண விக்ரம் கடைசி இடத்தை தக்க தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.்எனவே இந்த வாரம் சரவண விக்ரம் வெளியேறவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. ஒரே ஒரு வெளியேற்றம் மட்டும் இருந்தால் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டு ரவீனா தக்க வைக்கப்படுவார் என்று கணிக்கப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 80 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டது. நாளை 81வது நாள் தொடங்க இருக்கிறது.

23 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் விளையாடி வருகின்றனர். இதில் இந்த வாரம் விசித்ரா, சரவண விக்ரம் மற்றும் ரவீனா ஆகிய மூன்று பேர் மட்டுமே நாமினில் சிக்கினர். விசித்ராவுக்கு மூன்று ஓட்டுகளும், சரவண விக்ரமுக்கு நான்கு ஓட்டுகளும், ரவீனா 5 ஓட்டுகளையும் பெற்றிருந்தனர். இரண்டு ஓட்டுகள் பெற்ற நபரை பிக் பாஸ் நாமினேஷன் லிஸ்டில் வைக்கவில்லை. எனவே இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களின் வீட்டில் இருந்து அவர்களது பெற்றோர்கள் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் வந்து போட்டியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.
நேற்றைய தினம் பூர்ணிமா, விஜய் வர்மா, சரவண விக்ரம் மற்றும் அர்ச்சனாவின் பெற்றோர்கள் வருகை தந்தனர். இவர்கள் அனைவரும் இணைந்து விசித்ரா சிறந்த போட்டியாளர் என்கிற விருதையும் வழங்கிவிட்டு சென்றிருந்தனர் தொடர்ந்து இன்று மணியின் தாயார், தினேஷின் பெற்றோர்கள், அர்ச்சனாவின் சகோதரி, நிக்சனின் தந்தை மற்றும் விஷ்ணுவின் சகோதரிகள் ஆகியோர் உள்ளே என்ட்ரி கொடுத்திருந்தனர். மீதமிருக்கும் மாயா, விசித்ரா, ரவீனா ஆகியோரின் குடும்பத்தினர் நாளை வீட்டிற்குள் என்ட்ரி கொடுப்பார்கள் என்று தெரிகிறது. இந்த நிலையில் இந்த வார வாக்கெடுப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஆரம்பம் முதலே விசித்ரா பல லட்சம் வாக்குகளை வாங்கி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
அவருக்கு நெருக்கமாக ரவீனா தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறார். ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சரவணன் விக்ரம் கடைசி இடத்தையேப் பிடித்திருக்கிறார். எனவே இந்த வாரம் கண்டிப்பாக சரவணன் விக்ரம் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை இரட்டை வெளியேற்றமாக இருந்தால் ரவீனா மற்றும் சரவணன் விக்ரம் ஆகிய இருவரும் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் 50 வயதை கடந்த விசித்ரா இந்த இளம் போட்டியாளர்களுக்கு நிகராக 80 நாட்களைக் கடந்து தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இந்த வாரம் தப்பித்து விட்டால் விசித்ரா எப்படியும் இறுதி மேடையை அலங்கரிப்பார் என்று அவரது ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.