Categories: சமூகம்

கழிவு நீரில் விழுந்து தொழிலார்கள் பலி

சென்னை அருகே நொளம்பூரில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மரணமடைந்துள்ளார்.

கழிவு நீரில் விழுந்து தொழிலார்கள் பலி 1

சமீப காலமாக விஷ வாயுக்கள் தாக்கி உயிரிழந்து செய்திகள் பரவலாக தென்பட்டு வருகின்றன. உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி தொழிலாளர்கள் கழிவு நீர் தொட்டியில் இறங்குவதால் அதிமாக உயிரிழக்கிறார்கள்.

இந்நிலையில், நொளம்பூர் அருகே ஜஸ்வந்த் நகர் ரெட்டி பாளையம் சாலையில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கழிவுநீரேற்றும் நிலையம் இருக்கிறது.

இந்த நிலையத்தில் இருக்கும் ஒரு பெரிய கழிவுநீர் தொட்டியை இரும்பு கம்பிகள் மூடும் பணியில் பாடி என்.எஸ்.கே. தெருவைச் சேர்ந்த கண்ணன் (45), அதேப் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (24) ஆகியோர் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனர்.

இதற்காக அவர்கள், வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நிலைத்தடுமாறி பிரகாஷ், கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தார். இதைப் பார்த்த கண்ணன், அவரைக் காப்பாற்ற முயன்றார்.

அப்போது அவரும், விஷவாயுவை நுகர்ந்ததால் மயங்கி தொட்டிக்குள் விழுந்து மரணமுற்றனர்.

இவர்களை மீட்ட தீயணைப்பு துறையினர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்