திடீரென கேக் வெட்டி கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் டீம்.! இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்..!

வெளியிட்டது

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடரான எதிர்நீச்சல் தற்போது கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில்வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்த நாடகம் முடிந்துவிட்டதோ என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சன் டிவியில் குடும்பப் பாங்கான தொடர்கள் பல வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. 90களில் ஆரம்பித்த இந்த வழக்கம் இன்றளவும் நீண்டு கொண்டிருக்கிறது. பல தொடர்கள் மக்களின் மனம் கவர்ந்த தொடர்களாக மாறிப் போயிருக்கின்றன.

திடீரென கேக் வெட்டி கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் டீம்.! இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்..! 1

தற்போது திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் எதிர்நீச்சல். இந்த தொடருக்கு இளைஞர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இதில் நடிகை கனிகா, தேவதர்ஷினி, நடிகர் மாரிமுத்து போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கோலங்கள் தொடரின் மூலமாக இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் திருச்செல்வம்.

இதற்கு பின்னர் திருச்செல்வத்தின் தொடர்கள் அனைத்தும் மிகப் பிரபலமானது. அல்லி ராஜ்ஜியம், மாதவி, சித்திரம் பேசுதடி, போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்களை திருச்செல்வம் இயக்கியிருக்கிறார். இந்த நாடகங்கள் அனைத்தும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது.மேலும் தொடர்ந்து பல நல்ல நாடகங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார் திருச்செல்வம்.

அப்பா மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இந்த தொடர் பலராலும் விமர்சிக்கப்பட்டது. பல பிற்போக்கு வசனங்களும் காட்சிகளும் இருந்ததாக எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் தற்போது பெண் புரட்சி பற்றி பேசுவதால் இந்த சீரியலுக்கு பல இல்லத்தரசிகளும் ரசிகைகளாக மாறியுள்ளனர். பலரும் விரும்பி பார்க்கும் இந்த தொடரின் குழுவினர் தற்போது கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த புகைப்படங்களை பகிர்ந்த சிலர் நாடகம் முடிவுக்கு வந்துவிட்டதாக புரளிகளை கிளப்பி விட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் உண்மையில் இது இயக்குனர் திருச்செல்வம் திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதற்காக மிகப்பெரிய விழா ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்நீச்சல் நாடகக்குழு மட்டுமில்லாமல் நடிகை தேவயானி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

சின்னத்திரையில் பல நல்ல நாடகங்களை கொடுத்த திருச்செல்வத்திற்கு வாழ்த்துக்களும், அவர் பல ஆண்டுகாலம் நன்றாக இருந்து திரைத்துறையில் பல நல்ல நாடகங்களை கொடுக்க வேண்டும் என்றும் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்