ஜீ தமிழில் டான்சராக பணியாற்றி வந்த டான்சர் ரமேஷ் என்பவர் இன்று பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது பிறந்தநாளான அன்றே அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது இன்னும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டிக் டாக் மூலம் பிரபலமானவர்கள் பல பேர் இருக்கிறார்கள். இந்த ஆப் வந்த பிறகு நடிகர்களாகவும், காமெடியன்களாகவும் பலர் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள். டிக் டாக் செயலி முடங்கிய பிறகு இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற பல சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பிரபலமாகி வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் ரமேஷ். நடனமாடிய வீடியோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு அதன் மூலமாக பிரபலமானார். இவரை பின் தொடர்பவர்களும் அதிகம். இவர் புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டான்ஸர் ரமேஷ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவரது நடனத் திறமையை பார்த்து இவருக்கு தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அஜீத் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஜெயிலர் படத்திலும் சிறிய வேடத்தில் நடித்து வருகிறார் ரமேஷ். இந்த நிலையில் இன்று மாலை அவர் தனது குடியிருப்பின் மாடிக்குச் சென்றிருக்கிறார் பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பேசன் பிரிட்ஜ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கணவன் மனைவி இடையே சில நாட்களாக பிரச்சனை இருந்ததாகவும் அதனால் மனம் உடைந்து கொண்ட ரமேஷ் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார் எனவும் தெரிய வந்திருக்கிறது. வளர்ந்து வரும் ஒரு கலைஞர் இப்படி அவசரப்பட்டு பாதியிலேயே தவறான முடிவு எடுத்துவிட்டாரே என்று அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்..! Watch the below Video..!
Youtube Video Code Embed Credits: Thanthi Tv.