Categories: அரசியல்

ஆந்திரவிற்கு 3 தலைநகரம்: ஜெகன்

ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகர்களை உருவாக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா உருவானது. மேலும் அதன் தலைநகராக ஹைதராபாத் நியமனமானது. அன்று முதல் ஆந்திராவிற்கு என தனியாக தலைநகரில் அதனால் அன்றைய முதல்வராக சந்திரபாபு அமராவதி என்ற பெயரில் புதிய தலைநகரை உருவாக்கினார். ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு தோல்வி பெற ஜெகன்மோகன் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆந்திரவிற்கு 3 தலைநகரம்: ஜெகன் 1

ஆனால் ஜெகன்மோகனுக்கு அமராவதி திட்டத்தின் மேல் ஈடுபாடு இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக இன்று சட்டசபையில் அறிக்கை ஒன்றை ஜெகன்மோகன் தாக்கல் செய்தார். அதில் சட்டசபைக்கான தலைநகரம், நிர்வாத்திற்கென தலைநகரம், நீதித்துறைக்கான தலைநகரம் என மூன்று தலை நகரங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார், மேலும் அமராவதி சட்டசபை செயல்படும் தலைநகரமாகவும், நிர்வாகம் வசதிக்கான தலைநகரமாக விசாகப்பட்டினம் இருக்கும் என்றும் நீதித்துறையின் தலைநகராக கர்நூல் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்