அப்பாவும் மகனும் ஒரே படத்துலயா?

அப்பாவும் மகனும் ஒரே படத்துலயா? 1

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள படத்தில் நடிக்கவுள்ளனர்.

விக்ரம் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘கோப்ரா’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் இவ்விரு படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படம் 40% மட்டுமே மீதமுள்ள நிலையில், தன்னுடைய 60 வது படத்தில் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைகிறார், லலித் தயாரிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளம்பரம்

மேலும் இந்தப் படத்தில் விக்ரமுடன் துருவ் விக்ரமும் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகிய ‘ஆதித்ய வர்மா’ படம் விமர்சன முறையில் கொண்டாடப்பட்டாலும், பெரிதாக வசூல் இல்லை. இதனால் அடுத்ததாக தனது அப்பாவுடன் களமிறங்குகிறார் துருவ் விக்ரம்.

விளம்பரம்

Leave a Comment