அதிக சம்பளம் பெறும் நட்சத்திரங்களின் 52 வது இடம் பெற்ற இந்தியர்!!

அதிக சம்பளம் பெறும் நட்சத்திரங்களின் 52 வது இடம் பெற்ற இந்தியர்!! 1

உலகில் அதிக சம்பளம் பெறும் பிரபலங்களின் பட்டியல் சமீபத்தில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது, இந்த ஆண்டு 100 பேரில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே அதில் இடம் பிடித்து உள்ளார். பாலிவுட் நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அக்‌ஷய் குமார் தான் அவர். அக்‌ஷய் குமார் ஜுன் மாதம் முதல் மே மாதம் 2020 வரை 48.5 மில்லியன் டாலர் (ரூ.362 கோடி) வருமானத்துடன் 52 வது இடத்தை பெற்றுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டுக்கான போர்ப்ஸ் பட்டியலிலும் அக்சய் பெயர் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் அக்சய் குமார் 33ஆவது இடத்தில் இருந்தார். அப்போது அவர் சுமார் 490 கோடிரூபாய் ($65 million) ஊதியம் ஈட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment