
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் இருந்தால் கூட பரவாயில்லை, தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். 15 ஆயிரம் ரூபாய் சம்பள அளவில் தமிழக அரசு வேலை காத்துக்கொண்டிருக்கிறது உடனே விண்ணப்பிக்கவும்.வேலூரில் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சமையலர், துப்புரவாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை பற்றிய தகவல்கள் இங்கு காணலாம்.
வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உண்டு, உறைவிடப் பள்ளிகள், விடுதிகள் இயங்கி வருகிறது. இந்த பள்ளிகளில் தற்போது 112 சமையலாலர் பணி, 26 தொகுப்பூதிய துப்புரவாளர் பணி ஆகியவற்றிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமையலாலர் பணி காலியிடங்களில் 83 பணியிடங்கள் ஆதிதிராவிடர் நலத்துறை, 29 சமையலாலர் பணியிடங்கள் பழங்குடியினர் துறையின் கீழ் வருகிறது.
இந்த சமையலர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால் போதுமானது. அதிகபட்சமாக 10ம் வகுப்பு தோல்வி அடைந்திருக்க வேண்டும். செப்டம்பர் 1ம் தேதி கணக்கின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 35 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும் என்பது முதல்கட்ட தகுதி குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி, வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்திலேயே குடியுரிமை பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் ஆதிதிராவிடர், பழங்குடியினராகவும், சைவ, அசைவ சமையல் நல்ல சுவையாக சமைக்த் தெரிந்திருப்பவராக இருந்தால் முன்னுரிமை உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி, விடுதிகளில் பணியில் சேர்க்கப்படுவார்கள். சமையலர் பணிக்கு அடிப்படை ஊதியம் மற்றும் இதர படிகளாக, ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து அக்டோபர் 18ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு வேலூர் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பைப் பார்க்கவும்:
https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2019/10/2019100484.pdf