மீண்டும் பிரபல நடிகருக்கு வில்லனாக களம் இறங்கும் விஜய் சேதுபதி? இந்த முறை யாருக்கு வில்லன் தெரியுமா

தமிழ் சினிமாவில் இயல்பாக நடித்து பல இதயங்களை கவர்ந்த நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஹீரோ கதாபாத்திரம் என்றாலும் சரி வில்லன் கதாபாத்திரம் என்றாலும் சரி அதை தன் தத்ரூபமான நடிப்பில் நடித்து முடித்து கொடுப்பார். இவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் குட்டி ஸ்டோரி. அதில் ஒரு பாகத்தில் நடித்திருந்தாலும் அனைவரையும் ரசிக்கும்படி செய்தார்.

மீண்டும் பிரபல நடிகருக்கு வில்லனாக களம் இறங்கும் விஜய் சேதுபதி? இந்த முறை யாருக்கு வில்லன் தெரியுமா 1

அதற்கு முன்பு இவர் வில்லனாக நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து துக்லக் தர்பார் , காதுவக்குல ரெண்டு காதல் , யாதும் ஊரே யாவரும் கேளிர் , லாபம் , மாமனிதன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளியாக உள்ளது. மாஸ்டர் படத்தில் வில்லனாக அசத்தியதை தொடர்ந்து விஜய் சேதுபதி மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக மிரட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்
மீண்டும் பிரபல நடிகருக்கு வில்லனாக களம் இறங்கும் விஜய் சேதுபதி? இந்த முறை யாருக்கு வில்லன் தெரியுமா 3

இந்த முறை தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் க்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற கே.ஜி.எப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது ஜூனியர் என்.டி.ஆரை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடையவை  இனி இவருக்கு பதில் இவர்.! சீரியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பிக்பாஸ் பிரபலம் தினேஷ்.!
மீண்டும் பிரபல நடிகருக்கு வில்லனாக களம் இறங்கும் விஜய் சேதுபதி? இந்த முறை யாருக்கு வில்லன் தெரியுமா 5
விளம்பரம்

Leave a Comment