மகளோடு cycle ஓட்டிய நடிகர் அரவிந்த் ஸ்வாமி! வைரல் புகைப்படம்

இன்றுவரை தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கு கனவு கண்ணனாக இருப்பவர் நடிகர் அரவிந்த் ஸ்வாமி. இன்றுள்ள பல நடிகர்கள் தற்போதைய பெண்களுக்கு பிடித்திருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அரவிந்த் ஸ்வாமியை போல் கணவன் வேண்டும் என்ற பெண்கள் ஏராளமாக இருந்தனர். அந்த அளவிற்கு தன்னுடைய ஸ்டைலிஷ் ஆன தொடரத்தில் சிறந்த நடிப்பு திறன் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் அரவிந்த் ஸ்வாமி. இவர் 1991 ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளிவந்த தளபதி படத்தின் மூலம்

மகளோடு cycle ஓட்டிய நடிகர் அரவிந்த் ஸ்வாமி! வைரல் புகைப்படம் 1

தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே பிரபலமடைந்த அரவிந்த் ஸ்வாமிக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இவர் நடித்த ரோஜா , பாம்பே, மின்சார கனவு , போன்ற படங்கள் மக்களிடம் இவரை சிறந்த நடிகராக வெளிக்காட்டியது. 2006 வரை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அரவிந்த் ஸ்வாமி திடீரென தமிழ் சினிமாவை விட்டு காணாமல் பொய் விட்டார். அவரை கடல் படத்தின் மூலம் மீண்டும் கொண்டுவந்தார் இயக்குனர் மணிரத்னம்.

விளம்பரம்
மகளோடு cycle ஓட்டிய நடிகர் அரவிந்த் ஸ்வாமி! வைரல் புகைப்படம் 3

அதுவரை ஹீரோவாகவே நடித்து வந்த அரவிந்த் ஸ்வாமியை வில்லனாக மாற்றி தனி ஒருவன் படத்தில் மிரட்ட வைத்தார் இயக்குனர் மோகன் ராஜா. அதன் பிறகு போகன் , செக்க செவந்த வானம் , பாஸ்கர் ஒரு ராஸ்க்கல் போன்ற படங்களில் நடித்தார். இறுதியாக இவர் தற்போது தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் ஆக நடித்துள்ளார் அரவிந் ஸ்வாமி. இந்நிலையில் இவரது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மகளோடு cycle ஓட்டிய நடிகர் அரவிந்த் ஸ்வாமி! வைரல் புகைப்படம் 5
விளம்பரம்

Leave a Comment