மிகவும் பிரபலமான தமிழ்ச் சேனலான விஜய் டிவியில் வருடா வருடம் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ “பிக் பாஸ்”. 2017 இல் இருந்து நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வருடமும் நடைபெறும் என்று மக்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கும் போட்டியாளர்கள் பட்டியல் குறித்து தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் இந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. போட்டியாளர்கள் பட்டியலில் உள்ளவர்களின் விவரம் இதோ. சமீபத்திய செய்தியின் படி யூடியூப் சேனலை ஆரமித்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த ‘ஜி.பி. முத்து’, மேலும் புகழ்பெற்ற “குக் வித் கோமாளி சீசன் 2” நிகழ்ச்சியின் பட்டத்தை வென்ற ‘கனி’. பின்பு “சர்பட்டா பரம்பரை” படம் மூலம் புகழ்

பெற்ற நடிகர் ‘ஜான் விஜய்’, ஷகீலாவின் மகள் ‘மிலா’ மற்றும் பிரபல தமிழ் கதாநாயகிகளான ‘ரம்யா கிருஷ்ணன்’, ‘பூனம் பாஜ்வா’, ஜெமினி பட நடிகை ‘கிரண் ரத்தோட்’, நடிகை ஷாலு சம்மு, குக் வித் கோமாளி ‘சுனிதா’, தமிழ் பிக் பாஸ் சீசன் 4 சம்யுக்தாவின் தோழி ‘ப்ரதாயினி’, மாடல் கோபிநாத் ரவி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகார பூர்வ தகவல் வரும்வரை காத்திருந்து தன் ஆக வேண்டும்.
