பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக அவதாரம் எடுத்துள்ளார் தளபதி விஜய். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் Beast படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தாயாருக்கும் இந்த படத்தின்

ஷூட்டிங் தற்போது விறு விறுப்பாக நடந்த்து வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் தல தோனி தளபதி விஜயை சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் சந்தித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் சந்தித்துள்ளனர். தளபதி விஜய்க்கும் சரி தல தோனிக்கும் சரி பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர்.

இன்று இணையத்தில் தல தளபதி என்ற caption ஓடு ரசிகர்கள் அனைவரும் அந்த புகைப்படத்தை செம்ம வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு போட்டியாக தல அஜித் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் real thala and thalapathy என்ற caption ஓடு வைரலாக்கி வருகின்றனர்.
