Valimai மரண மாஸ் Release Teaser Promo | Ajith Kumar

தமிழ் சினிமாவின் “தல” என்றாலே ஞாபகத்திற்கு வருபவர் தல அஜித் தான். தற்போது எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் “வலிமை”! இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். தல அஜித்தின் படம் என்றால் யுவனின் இசை எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி புகழும் நடித்துள்ளார். மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். போன வருடமே இந்த திரைப்படம் திரையில் வெளியாகும் என்று எண்ணி கொண்டிருந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. தல ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தும் விதமாக இந்த படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன. Watch the video below

Valimai மரண மாஸ் Release Teaser Promo | Ajith Kumar 1

விளம்பரம்

 

தயாரிப்பாளர் போனி கபூர் சில நாட்களுக்கு முன்பு அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டிருந்தார். வலிமை திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற தகவலை பகிர்ந்தார். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை பொங்கலுக்கு படம் வெளியாகவில்லை மேலும் அது தள்ளிப்போனது. அதோடு வெளியான வலிமை படத்தின் Glipmse, டீஸர், டிரைலர் என இதுவரை வெளியான அனைத்துமே அதிக லைக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. தற்போது இந்த படம் பிப்ரவரி மாதம் 24ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. Watch the video below.. Twitter Source from: Boney Kapoor

விளம்பரம்
தொடர்புடையவை  பொன்னியின் செல்வன் படத்தின் கடைசி பாடல் "தேவராளன் ஆட்டம்" வெளியானது.!

Valimai மரண மாஸ் Release Teaser Promo | Ajith Kumar 3

ரசிகர்கள் அனைவரும் ஆவலாக உள்ள நிலையில் போனி கபூர் ட்விட்டரில் புது வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ரோலர் கோஸ்டர் ரைட் ஆப் ஆக்ஷன் அண்ட் எமோஷன் இன்னும் 5 நாட்களில் என்ற வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the video below

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment