கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் காமெடியனாக வந்தவர்தான் புகழ். மிகவும் எளிய பிண்ணனியில் இருந்து தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு இன்று திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தன் திறமையை வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு பட வாய்ப்புக்கள் குவிந்து வருகின்றன. இவர் விஜய் டிவியில் ஏற்கனவே இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது.

இவரது முக பாவனைக்கும், இவரது உடல்மொழிக்கும், கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது.இவர் தன்னுடைய குக்கு வித் கோமாளி நண்பர் அஷ்வினுடன் சேர்ந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்தார். அதோடு முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ். மேலும் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார், கூடிய விரைவில் அனைத்து படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படங்களில் படு பிசியாக இருக்கும் போது அவ்வப்போது சில சில காமெடி வீடியோக்களும் தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவு செய்து வருகிறார்!

இவர் அஜித்துடன் இணைந்து நடித்த வலிமை படம் நேற்று வெளியாகியுள்ளது. புகழ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வலிமை படத்திற்கும் அதில் வரும் என்னுடைய கதாபாத்திரத்திற்கும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றும், வாய்ப்பளித்த அஜித் சார், H.வினோத், போனி கபூர் ஆகிய அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள் என அதில் கூறியுள்ளார்.!.. Watch the below video..