ஹரி அருண்விஜய் காம்போ.. யானை படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | Yannai Movie Release Date

Yaanai Movie: இயக்குனர் ஹரி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் வெளியாகவுள்ள திரைப்படம் யானை. இந்த திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் நிறைவடைந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளியான யானை படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இயக்குநர் ஹரி கடைசியாக இயக்கிய படம் சாமி 2. இந்த படம் 2018ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு சூர்யாவுடன் ஒரு படம் ஒப்பந்தம் ஆகி அது பாதியில் நின்று போனது.

ஹரி அருண்விஜய் காம்போ.. யானை படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | Yannai Movie Release Date 1

விளம்பரம்

தற்போது கிராமத்து கதைக்களத்தை பிண்ணனியாக கொண்டு தனது மச்சான் அருண் விஜயை வைத்து ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை எடுத்துள்ளார் ஹரி. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.குக் வித் கோமாளி புகழ் காமெடியனாக நடிக்கிறார். மேலும் ராதிகா, போஸ் வெங்கட் போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன பின்பு தொலைக்காட்சியில் வெளியிடும் உரிமத்தை ஜீ தமிழ் நிறுவனம் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Youtube Video Code Embed Credits: Nettu4U

ஹரி அருண்விஜய் காம்போ.. யானை படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | Yannai Movie Release Date 3

விளம்பரம்

 

தொடர்புடையவை  என் மனைவி Aarti-ஐ பிரிந்துவிட்டேன்..! விவகாரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த Jayam Ravi..!

இந்த நிலையில் இந்த படம் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி Yaanai Movie வருகின்ற மே மாதம் 6ம் தேதி கோடை விடுமுறையில் வெளியாகயுள்ளது. சூர்யாவுடன் இணைந்து இயக்குனர் ஹரி கொடுத்த சிங்கம் திரைப்படங்கள் போலவே அருண் விஜயுடன் முதல் முறையாக இணைந்த இந்த கூட்டணி வெற்றியை தரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறி உள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video…

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment