மிகவும் எதிர்பார்க்கப்படும் அவதார் 2 படத்தின் ட்ரைலர் வெளியானது

ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 படத்தின் டீஸர் தற்போது ஆன்லைனில் வெளியாகியுள்ளது. தி வே ஆஃப் வாட்டர் படம் மொத்தம் நான்கு அவதார் படங்களில் இரண்டாவது படமாகும். இந்த ஆண்டு டிசம்பர் 16 அன்று இந்த படம் உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் டீஸர் ட்ரைலர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் சென்ற வாரம் திரையரங்குகளில் பிரத்தியேகமாக ஒளிபரப்பப்பட்டது, டிஸ்னி மார்வெலின் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸுடன் இணைக்கப்பட்டது. தற்போது அந்த ட்ரைலர் ஆன்லைனில் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

மிகவும் எதிர்பார்க்கப்படும் அவதார் 2 படத்தின் ட்ரைலர் வெளியானது 1

முதல் படத்தின் தொடர்ச்சியாக ஜேக் சுல்லி மற்றும் நவி நெய்திரி மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒருவரையொருவர் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நடப்பதை ஒட்டி படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீஸர் டிரெய்லர் பண்டோராவின் பிரகாசமான நீல நீர், பறக்கும் உயிரினங்கள் டோருக் மற்றும் முதல் பகுதியிலிருந்து புதிய திமிங்கலம் போன்ற உயிரினங்களைக் காட்டுகிறது.

விளம்பரம்

ஜேம் கேமரூனின் அவதார் முதல் பாகம் 2009 இல் வெளியிடப்பட்டது. இது உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் $2.84 பில்லியனுடன் தற்போது வரை அதிக வசூல் செய்த திரைப்படமாக உள்ளது. முதல் பக்கம் வெளியாகி 13 ஆண்டுகள் கழித்து 2வது பாகம் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 168 மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

தொடர்புடையவை  "வாழ்க்கைல உச்சம் தொட்டுட்டேன்...ஆனா அவர் கிட்ட இருக்க 10% நிம்மதி கூட இல்ல - நெகிழ்ந்த ரஜினி"!!

விளம்பரம்

Video Courtesy – Avatar youtube page

விளம்பரம்

Leave a Comment