ராஜா ராணி 2 என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்துவருபவர் சித்து. இவரது மனைவி ஸ்ரேயா. இருவரும் இணையத்தைக் கலக்கி வரும் தம்பதிகள். இருவரும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்னும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர்கள். சித்து சந்தோஷ் என்ற கதாபாத்திரத்திலும், ஸ்ரேயா ஜனனி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருப்பார்கள். நாடகத்தில் இவர்கள் இருவரின் பொருத்தமும் சூப்பராக இருந்ததால் நிஜத்திலும் இவர்கள் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இருவரும் இணைந்து சித்து ஸ்ரேயா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இதில் இவர்கள் செய்யும் குறும்புத் தனமான Vlog வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். மேலும் இருவரும் ஏதாவது புது படத்தில் பாடல் வெளி வந்தால் அதே போல் கெட்டப் அணிந்து இருவரும் ஆடி சமூக வலைத்தளங்களில் பல லட்சம் பின் தொடர்பவர்களை வைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான அரபிக் குத்து பாடலுக்கும், ஜாலியோ ஜும்கானா பாடலுக்கும் இவர்கள் செய்த ரீல்ஸ் மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. விஜயை போலவே ஆடி அசத்தி இருப்பார் சித்து. Youtube Video Code Embed Credits: Sidhu & Shreya

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு ரீல்ஸ் செய்துள்ளனர். அதில் ஸ்ரேயா கர்ப்பமாக உள்ளது போன்று உள்ளார். இது நிஜமானால் நன்றாக இருக்கும் என்று பேசி இருவரும் ரொமான்ஸ் செய்கின்றனர். அந்த வீடியோவிற்கு கீழே விரைவில் உங்கள் கனவு நிஜமாகும் என்று அவரது ரசிகர்கள் கமெண்டுகள் போட்டு வருகின்றனர். அந்த அழகிய வீடியோவை நீங்களும் காண…கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்..!! Watch the below video..