நயன்தாரா கூட படம் பண்றேனா? தோனி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு | Dhoni Nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அடுத்த படம் தல தோனியுடன் நடிக்கப் போகிறார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு தீயாகப் பரவியது. ஆனால் இது குறித்து நயன்தாரா தரப்பில் இருந்தோ அல்லது தோனி தரப்பில் இருந்தோ உறுதியான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது இந்த செய்தி குறித்து தோனி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தோனி என்ட்டெய்ண்ட்மென்ட் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்தி குறித்து கூறியுள்ளனர்.

நயன்தாரா கூட படம் பண்றேனா? தோனி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு | Dhoni Nayanthara 1
மகேந்திர சிங் தோனி அவர்கள், கிரிக்கெட்டை தாண்டி, விளம்பரங்களில் நடிப்பது, பிராண்ட் அம்பாசிட்டராக இருப்பது போன்ற சைடு பிஸினஸ் செய்து வருகிறார். மேலும் அவரின் தோனி என்ட்டெய்ண்மெட் கம்பெனியில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் உதவியாளராக இருந்த சஞ்சய் எனபவர் இணைந்து படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. அதிலும் குறிப்பாக நயன்தாரா உடன் இணைந்து தோனி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. ஆனால் தோனி தரப்பில் இருந்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் சஞ்சய் என்ற பெயரில் யாருடனும் நாங்கள் வேலை பார்க்கவில்லை என்றும், Youtube Video Code Embed Credits: Galatta

விளம்பரம்

நயன்தாரா கூட படம் பண்றேனா? தோனி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு | Dhoni Nayanthara 3

அவ்வாறு சஞ்சய் என்பவரை தோனி என்ட்டெயிண்மன்ட் வேலைக்கும் சேர்க்கவில்லை, அது போன்ற எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை என்று உறுதி செய்துள்ளது. மேலும் நாங்கள் நிறைய திட்டங்களில் வேலை செய்து கொண்டிருக்கிறோம் அது குறித்து விரைவில் அறிவிப்போம் என்றும் தோனி தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் தோனி நயன்தாரா இணைந்து நடிக்க போவதில்லை என்ற செய்தி உறுதியாகியுள்ளது. தோனி நயன்தாரா இணைந்து நடிக்க உள்ள வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது தோனி தரப்பு..
அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below Video..

விளம்பரம்
தொடர்புடையவை  கணவருக்கு பாத பூஜை செய்த சகுனி பட ஹீரோயின்.! ட்ரோல் பண்ணிக்கோங்க கவலை இல்லை.!

விளம்பரம்

Leave a Comment