பிக் பாஸ் வனிதாவிற்கு இப்பொது தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை. தந்தை விஜய்குமாருடன் சண்டையில் தொடங்கி பிக் பாஸ் வீட்டில் செய்த அலப்பறை வரை அனைத்தும் ரசிகர்களுக்கு நன்கு தெரியும். இன்னும் சொல்ல போனால் விஜய் டிவியின் பிக் பூஸ் நிகழ்ச்சியின் இவரும் முக்கிய காரணம். அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியில் அளப்பறையை கூட்டியவர். வீடியோ லிங்க் கீழே.

பிற சில விஜய் டிவியின் ப்ரோக்ராமில் நடுவராக இருந்தார். பெரும்பாலும் பேட்டி கொடுக்கும் இவர், பேட்டி எடுப்பவரை கத்தி திட்டி தீர்ப்பது வழக்கம். அதில் பல விடியோக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

இந்நிலையில் இவரிடம் மாட்டிகொண்டுட்டு நடிகை தேவயானி தற்போது படாத பாடுபட்டுள்ளார். ஆம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புது புது அர்த்தங்கள் தொடரில் நடிகை தேவயானி தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்க்க, பேட்டி கொடுக்க வரும் வனிதாவிற்கு அவர் எழுதிய கேள்விகளை யாரோ மாற்றி விட இது தெரியாமல் நெறியாளருக்கு அந்த கேள்விகளை கேட்டுவிட கோபத்தில் வனிதா “யார் இப்படிலாம் கேள்வி கேக்க சொன்னது?” என கத்த அவரிடம் என சொல்வது என தெரியாமல் தேவயானி முழிப்பது போல ப்ரோமோ வீடியோ ஒன்று இப்பொது வெளியாகி உள்ளது.
Video Courtesy – zee tamil