விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட இரு போட்டியாளர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. இவர்கள் இருவரும் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து விஜய் டிவி நடத்தி வரும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று உள்ளனர். சின்னத்திரையில் சின்னதம்பி சீரியலில் நடித்து பிரபலமானவர் பாவனி. ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் பிக்பாஸ் 5க்கு அழைக்கப்பட்டார். இதில் வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டவர் தான் அமீர்.

இவர் பாவனியை காதலிப்பதாக கூறி பிக்பாஸில் நாட்களை கடத்தி வந்தார். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகும் கூட நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என கூறி வந்தார் பாவனி. தற்போது இருவரும் ஜோடியாக பிக்பாஸ் ஜோடிகளில் இணைந்து நடனம் ஆடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களான வேல்முருகன், ஐக்கி, இசைவாணி, அபிஷேக், ஸ்ருதி, சுஜா போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர். Youtube Video Code Embed Credits: Vijay Television

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கிராமம், சிட்டி என்ற தலைப்பில் போட்டியாளர்கள் நடனம் ஆட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. முதல்வன் படத்தில் வரும் உப்புக்கருவாடு பட பாடலுக்கு அமீரும் பாவனியும் நடனம் ஆடியுள்ளனர். மேலும் மேடையில் வைத்தே பாவனியிடம் அமீர் ஐ லவ் யூ என்று கூறினார். இதை பார்த்த ரம்யா கிருஷ்ணன் அதிர்ச்சியில் உறைந்தார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..