குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை ஆண், பெண், குழந்தைகள் என எந்தவித வேறுபாடும் இன்றி அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்துள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை. ஒரு நிகழ்ச்சி முடியப் போகிறதே என்று, பார்க்கும் அனைவரையும் வருத்தப்பட வைத்த ஒரு ரியாலிட்டி ஷோ ஒன்று உள்ளது என்றால் அது குக் வித் கோமாளிதான். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். பல பேருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு Stress Buster ஆக இருந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கீழே உள்ள வீடியோவை பாருங்கள்..

சுட்டித்தனங்கள் நிறைந்த உதவியாளரை கோமாளி என்ற பெயரில் வைத்துக் கொண்டு குக்குகள் சமையல் செய்யும் ஒரு புது விதமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இவர்கள் இணைந்து சமைக்கும் போது நடக்கும் ரகளைகள் உண்மையிலேயே சிரிப்பை வரவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பதற்போது இரண்டு சீசன்களை முடித்து மூன்றாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இதில் கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, பாரதி கண்ணம்மா ரோஷ்ணி, தர்ஷன், வித்யூலேகா ராமன், ஸ்ருதிகா தற்போது குக்குகளாக உள்ளனர். Youtube Video Code Embed Credits: Vijay Television

குக் வித் கோமாளி ப்ரோமோவை பார்ப்பதற்கு பல ரசிகர்கள் உள்ளனர். ப்ரோமோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து விடுவது வழக்கம். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் advantage டாஸ்க்-ல் குச்சி ஐஸ் தின்னும் போட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் குக்குகள் வாயிலும், கோமாளிகள் வாயிலும் குச்சி ஐஸை வைத்து திணிக்கின்றனர். செம்ம காமெடியாக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video