நடிகர் ஆதிக்கும், நடிகை நிக்கி கல்ராணிக்கும் இன்று திருமணம் முடிந்துள்ளது. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவர்களது திருமணம் சென்னையில் இன்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இவர்களுடைய நிச்சயதார்த்திற்கு யாரையும் அழைக்கவில்லை. மிகவும் ரகசியமாக நடந்து முடிந்தது இவர்களின் நிச்சயதார்த்தம். ஆனால் திருமணத்திற்கு பலரையும் அழைத்து இருந்தார் ஆதி. முக்கியமாக தல அஜீத்தை நேரில் சந்தித்து பத்திரக்கை வழங்கி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதியை பொறுத்துவரை மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் தமிழில் முதன்முதலாக மிருகம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். பின்னர் அரவாண் என்ற படத்தின் மூலம் பிரபலமானார். பின்னர் ஈரம், யாகவராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்தார். இந்த இரு படங்களிலும் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நிக்கி கல்ராணி. மரகத நாணயம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இவருக்கும் ஆதிக்கும் காதல் ஏற்பட்டது. Youtube Video Code Embed Credits: Behindwoods Tv.

ஆனால் இருவரும் காதலிப்பதை பொது வெளியில் கூறவில்லை. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இந்த விழாவிற்கு யாரையும் அழைக்கவில்லை. புகைப்படம் மட்டுமே வெளியாகி இருந்தது. பின்னர் நேற்று இருவருக்கும் ஹால்தி எனப்படும் நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் நானியுடன் இணைந்து ஆலுமா டோலுமா பாடலுக்கு இருவரும் நடனம் ஆடி இருந்த வீடியோ வைரலானது. இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch Adhi Nikki Galrani Marriage Video..