சின்னத்திரையில் சின்னதம்பி சீரியலில் நடித்து பிரபலமானவர் பாவனி. ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இவர் ஏற்கனவே விஜய் டிவி சீரியலில் நடித்து இருந்தார். பின்னர் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் பிக்பாஸ் 5க்கு அழைக்கப்பட்டார். இதில் வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டவர் தான் அமீர். நடன இயக்குனநராக இருந்த இவர் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இவர்கள் இருவரும் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து விஜய் டிவி நடத்தி வரும் “பிக்பாஸ் ஜோடிகள்” என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸில் அமீர் பாவனியை காதலிப்பதாக கூறி பிக்பாஸில் நாட்களை கடத்தி வந்தார். ஆனால் பாவனி அதை மறுத்தார். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை என கூறி வந்தார் பாவனி. தற்போது இருவரும் ஜோடியாக பிக்பாஸ் ஜோடிகளில் இணைந்து நடனம் ஆடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களான வேல்முருகன், ஐக்கி, இசைவாணி, அபிஷேக், ஸ்ருதி, சுஜா போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் அமீரும், பாவனியும் டான்ஸ் பயிற்சி செய்து வருகின்றனர். அதில் மிக கடுமையாக இருவரும் பயிற்சி செய்து வருகின்றனர். அமீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பாவனி மூச்சு வாங்க கீழே அமர்ந்துவிட்டார். ஆனாலும் விடாமல் பாவனியை ஆட வைக்கிறார் அமீர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..