இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் நம் சென்னையை சேர்ந்தவர். கிரிக்கெட் மட்டுமின்றி தற்போது யூடூபில் அவ்வப்போது தன்னுடைய கிரிக்கெட் ஆட்டங்களை பற்றியும், நமக்கு தெரியாத சில விஷயங்கள் பற்றியும் பேசி பதிவிட்டு வருகிறார். மேலும் பல டாக் ஷோவில் கலந்து கொண்டு பேசியும் வருகிறார். அப்படி ஒரு நேரலையில் அவர் ஜீ தமிழ் வெப்செரீஸ் விலங்கு குறித்து பாராட்டி பேசியுள்ளார்.

நடிகர் விமல் நடிப்பில் பிரசாத் பாண்டிராஜ் இயக்கிஇருந்த இந்த தொடரில் இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பல நடிகர்கள்நடித்து இருந்தார்கள். இந்த தொடர் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த தொடரில் நடித்த அனைவரின் நடிப்பும் பாரட்டப்பட்டாலும் கிச்சா என்ற கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானது.
அதிலும் அவர் பேசிய ‘கிச்சான்னாலே இளிச்ச வாயன் தான’ என்ற வசனம் மீம் மெட்டீரியலாக கூட மாறியது. மேலும், இந்த தொடரில் கிச்சா கதாபாத்திரம் பலரிடமும் ‘என் பொண்டாட்டி சூப்பரா டீ போடுவா, வீட்டுக்கு வாங்களேன்’ என்று அழைத்து சென்று பின் அவர்களை தன் மனைவி மூலம் மயக்கி வலையில் விழ வைத்து அவர்களிடம் பணம் பரிபார். இதுவே அவருடைய வெளியாக இதுக்கும் அந்த தொடரில்.
கடந்த சில வருடங்களாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் இவருக்கு கை கொடுக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் இவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான விலங்கு வெப் தொடர் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த தொடரை பார்த்துவிட்டு கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டி இருந்தார். அதிலும் குறிப்பாக கிச்சா கதாபாரத்திரத்தில் நடித்த ரவியை குறிப்பிட்டு பாராட்டி இருந்தார். இதற்கு நன்றி தெரிவித்த நடிகர் ரவி ‘அஸ்வின் சார், வணக்கம் சார், நீங்க விலங்கு பார்த்தேன் என்று சொன்னது மிகவும் பெருமையாக இருக்கிறது. நீங்கள் அப்படி சொன்னது எனக்கு ஒரு எனர்ஜியை கொடுத்து இருக்கிறது என்று கூறியுள்ள ரவி இறுதியாக ‘நீங்க பிரீயா இருந்தா வாங்களேன் ஒரு டீ சாப்பிட்டு போகலாம், என் பொண்டாட்டி நல்லா டீ போடுவா’ என்று விலங்கு படத்தில் வரும் வசனத்தை கூறி இருந்தார்.
இதற்கு இப்பொது அஸ்வின் அந்த தொடரிலியே இடம் பெரும் “கிச்சனாலே இளிச்சவாயன் தானா” என ட்விட்டரில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.