ரத்னவேலுவை கொண்டாடுபவர்கள் சாதிய மனநோயாளிகள்.! வெளுத்து வாங்கிய விசிக வன்னியரசு.!

சமீப காலமாக இணையத்தை கலக்கி வரும் ஒரு நிகழ்வு தான் மாமன்னன் திரைப்படத்தில் வரும் பகத் பாசிலின் காட்சிகள். ஒவ்வொரு சாதியினரும் தங்களது சாதிய பின்னணி பாடல்களை போட்டு பகத் பாசிலின் வீடியோவை எடிட் செய்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது விடுதலை சிறுத்தையும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் வன்னியரசு தனது முகநூல் பதிவின் மூலமாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். சாதிய வெறியனாக இருக்கும் பகத் பாசில் கதாபாத்திரத்தை கொண்டாடுபவர்கள் மனநோயாளிகள் என்று அவர் அந்த பதிவின் மூலமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

ரத்னவேலுவை கொண்டாடுபவர்கள் சாதிய மனநோயாளிகள்.! வெளுத்து வாங்கிய விசிக வன்னியரசு.! 1

விளம்பரம்

 

மாமன்னன் திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடித்த பகத் பாசிலின் ரத்னவேலு கதாபாத்திரத்தை தற்போது பலரும் எடிட் செய்து பதிவிட்டு வருகின்றனர். சாதி வெறி பிடித்த அரசியல்வாதியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்த பஹத் நடித்த காட்சிகளை எல்லாம் எடுத்து செய்து அதை பல்வேறு சாதியினர் தங்களது சாதி பெருமை பேசும் பாடல்களுடன் எடிட் செய்து இணையத்தில் பரவ விட்டு வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  சாண்டி மச்சினிச்சியுடன் சேர்ந்து மரண குத்தாட்டம் போட்ட ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா

இது தற்போது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சாதிவெறி பிடித்தவரை தவறான முறையில் சித்தரித்து படம் எடுத்திருந்ததை தற்போது பலரும் தங்களது சாதி பெருமை பேசும் வகையில் மாற்றிக் கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைய தலைமுறைகள் மத்தியில் இது சாதிய வன்மத்தை தூண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான வன்னியரசு தனது பேஸ்புக் பதிவு மூலமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

ரத்னவேலுவை கொண்டாடுபவர்கள் சாதிய மனநோயாளிகள்.! வெளுத்து வாங்கிய விசிக வன்னியரசு.! 3
இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது,”மாமன்னன் திரைப்படம் வெளிவந்ததிலிருந்து சாதியவாதிகளுக்கு பதற்றம் பீறிட்டு,என்ன செய்வது என தெரியாமல் பிதற்றி வருகிறார்கள். வெளிவந்த நாளில் தென்மாவட்டங்களில் தியேட்டர்களை முற்றுகையிட்டன சாதியவாதிகள். அப்புறம் தான் கதைக்களமே தென்மாவட்டம் இல்லை என தெரிந்து தலையை சொறிந்து கொண்டனர். இப்போது ரத்னவேல் கதாபாத்திரத்தை சாதியவாதிகள் கொண்டாடி வருகின்றனர். அதாவது,நாயை படுகொலை செய்வதை கொண்டாடுவது, சொந்த சாதிக்காரனையே படுகொலை செய்வதை கொண்டாடுவது என சாதிய மனநோயாளிகளாக மாறுகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ள படக்குழு.!

அதுவும் அவரவர் சாதிகளை இணைத்து சாதிப்பெருமையோடு பதிவிட்டு வருகின்றனர். இதில் சாதியவாதிகளுக்கு மகிழ்ச்சி என்பது தற்காலிகம் தான்.
ஏனெனில், சாதியவாதியான ரத்னவேலுக்கு ஏற்படும் சோக முடிவை யாரும் மறந்திருக்க முடியாது. சாதியவாதிகளுக்கு நாளை இந்த முடிவுதான் ஏற்படும் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜ் எச்சரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். என்று பதிவிட்டு உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment