ஆர்.ஆர்.ஆர். நாயகனுடன் சேரும் கே.ஜி.எஃப் பிரஷாந்த் நீல்!!!வெறித்தனமாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!!

கே.ஜி.எஃப் பட புகழ் பிரஷாந்த் நீல், 2 படங்களின் மூலம் இந்திய திரையுலக உச்சத்தை தொட்டுள்ளார். கன்னடத்தில் வெளியான “உக்ரம்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கர்நாடக திரை ரசிகர்களை ஆச்சரியப்படவைத்தார்.

பின்னர் கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2 என இரண்டு படங்களை கொடுத்து அந்த திரைஉலகிற்கே பெரும் பெருமையை கொடுத்தார். கே.ஜி.எஃப் 2 படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

விளம்பரம்

ஆர்.ஆர்.ஆர். நாயகனுடன் சேரும் கே.ஜி.எஃப் பிரஷாந்த் நீல்!!!வெறித்தனமாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!! 1

இப்பொது இவர் பாகுபலி புகழ் பிரபாஸுடன் இணைந்து ‘சலார்” படம் இயக்கி வருகிறார். இந்நிலையில் இவர் அடுத்த படம் யாருடன் இணைய உள்ளார் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளார் அவர்.

விளம்பரம்

ஆர்.ஆர்.ஆர். படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரை ரசிகர்களையும் தன்னுடைய நடிப்பு திறமையால் கட்டிப்போட்ட ஜூனியர் என்.டி.ஆருடன் அவர் இணைய உள்ளார். இப்பொது ஜூனியர் என்.டி.ஆர் கொரடாலா சிவாவுடன் இணைந்து  என்.டி.ஆர்30 படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்புடையவை  The Legend - Jukebox | ரொம்ப நாளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் நல்ல பாடல்கள் கேட்ட அனுபவம்..

ஆர்.ஆர்.ஆர். நாயகனுடன் சேரும் கே.ஜி.எஃப் பிரஷாந்த் நீல்!!!வெறித்தனமாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!! 3

விளம்பரம்

இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் என்.டி.ஆர் தொடர்ந்து தனது 30,31 படங்களின் அறிவிப்பை வெளியீட்டுளளார். பிரஷாந்த் நீலுடன் அவர் இணையும் என்.டி.ஆர் 31 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படம் வருகிற டிசம்பர் இறுதியில் தொடங்க உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாராகும் இந்த படத்தில் நடிக்கும், பணிபுரியுள்ள மற்றவர்களின் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

விளம்பரம்

ஆர்.ஆர்.ஆர் மற்றும் கே.ஜி.எஃப் என இருபெரும் படங்களின் நாயகனும், இயக்குனரும் இணைய உள்ளதால், படத்திற்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

ஆர்.ஆர்.ஆர். நாயகனுடன் சேரும் கே.ஜி.எஃப் பிரஷாந்த் நீல்!!!வெறித்தனமாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment