மறுபடியும் அஜித் நயன்தாரா ஜோடியாக நடிக்க உள்ளார்களாம்!!

மறுபடியும் அஜித் நயன்தாரா ஜோடியாக நடிக்க உள்ளார்களாம்!! 1

தல 60′ படத்தில் மீண்டும் அஜித் – நயன்தாரா ஜோடி இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வையை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்க உள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் புதிய படத்தையும் ஜீ ஸ்டூடியோஸ் வழங்க, போனி கபூரே தயாரிக்கவுள்ளார்.

இதன் கதை விவாதம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், தற்போது நடிகர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தப் படத்தில் மீண்டும் அஜித்துடன் இணைந்து கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களின் கூட்டணி இறுதியாக நடித்த ‘விஸ்வாசம்’ மாபெரும் வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் ரசிகர்கள் இந்த செய்தியைக் கொண்டாடி வந்தாலும், படக்குழுவினரோ அமைதி காத்து வருகின்றனர். இது தொடர்பாக விசாரித்த போது, “உண்மையில் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை. இதர முக்கிய கதாபாத்திரங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  "ஜவான் பாத்துட்டு நான் உயிரோட இருப்பேனானு தெரியல" கலாய்த்து ப்ளூ சட்டை போட்ட ட்வீட்.!

அதற்குள் நயன்தாரா, ரகுல் ப்ரீத் சிங், ஜான்வி கபூர் என்று அவர்களுக்குத் தோன்றும் பெயர்களை எல்லாம் நாயகி என்று வெளியிட்டு வருகிறார்கள். இதில் எதுவுமே உண்மையில்லை” என்று தெரிவித்தார்கள். மேலும், படப்பூஜை நடைபெறும் அன்று படக்குழுவினர் யாரென்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று தெரிவி்த்துள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment