துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் செய்த சாதனை! கொண்டாடும் ரசிகர்கள்!!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் செய்த சாதனை! கொண்டாடும் ரசிகர்கள்!! 1

தமிழ் திரையுலகில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனது நடிப்பு மூலம் திரைத் துறையில் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்துள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை. அஜித் தனது நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், ஏரோ மாடலிங், சமையல் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்துச் சிறந்தவராக உள்ளார். அந்த வகையில் சென்ற மாதம் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்று அடுத்த சுற்றுக்குத் தேர்வாகி இருந்தார்.

பின்பு டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துக் மேற்கொண்டு இருந்தார். அப்போது அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஜித் பங்கேற்றிருந்த தேசிய பயிற்சிப் போட்டியின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தப் போட்டிகளில் மொத்தம் மூன்று பிரிவில் அவர் பங்கு பெற்றிருந்தார். அதில், ப்ரீ பிஸ்டல் பிரிவில் எட்டாவது இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் ஒன்பதாவது இடத்தையும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவில் 12வது இடத்தையும் பிடித்துள்ளார். இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  விமல் நடித்துள்ள தெய்வ மச்சான் திரைப்படம் எப்படி இருக்கு..? முழு திரைவிமர்சனம் இதோ.!

கடைசியாக அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளியானது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்த அஜித்தின் நடிப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விளம்பரம்

Leave a Comment