தமிழ் இசை உலகில் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளவர் தான் யுவன் சங்கர் ராஜா. மாஸ்ட்ரோ இளையராஜா அவர்களின் மகன்தான் யுவன். 1997ம் ஆண்டு வெளிவந்த அரவிந்தன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அவர் இசைத்துறையில் காலடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. தன் திறமையாலும், வசீகர குரலாலும் பல இதயங்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காதலிப்பவர்களுக்கு யுவனின் இசை ஒரு வரம். தொலைதூர காதலர்களுக்கு இசையால் பாலம் அமைத்தவர். மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலணி, பருத்தி வீரன், கற்றது தமிழ், பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் எல்லாம் யுவனின் தரமான இசையில் அமைந்த பாடல்கள். குறிப்பாக நா. முத்துக்குமாரும், யுவனும் சேர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். இப்படியொரு மாபரும் இசைக் கலைஞனுக்கு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து பாராட்டு விழா ஒன்று நடைபெற்றது. Youtube Video Code Embed Credits: Galatta Tamil

இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி யுவனுக்கு விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார். பருத்திவீரன், நான் மகான் அல்ல, பையா, பிரியாணி மேலும் வரவிருக்கும் விருமன் உட்பட கார்த்தியின் பல வெற்றிப்படங்களில் யுவன் இசையமைத்துள்ளார். மேலும் கல்லூரி விழாவிற்கு சென்ற யுவன் மேடையில் நீதானே என் நரம்புக்குள் ஓடினாய் என்ற பாடலையும் தனது தந்தையின் நான் தேடும் செவ்வந்தி பூவிது என்ற பாடலையும் பாடினார். அவர் பேசி முடித்ததும் யுவன் யுவன் என்று கூட்டமே கத்தியது. அந்த வீடியோவை நீங்களும் காண..watch the below video..