நடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்தர் பற்றி நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த சில தினங்களாக டி.ராஜேந்தர் அவர்களின் உடல்நிலைப்பற்றி தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அவர் மிகவும் சீரியஸ் கண்டிசனில் இருப்பதாகவும், உயர்சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் சிம்பு அது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜேந்தர் அவர்களுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்ப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பரிசோதனை செய்து பார்த்ததில் வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்ப்பட்டுள்ளதாகவும் சிம்பு கூறியுள்ளார். மேலும் உயர் சிகிச்சைகாக வெளிநாடு அழைத்து செல்ல உள்ளதாகவும், அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார் என்றும் சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் மாபெரும் பங்காற்றிய அந்த கலைஞன் விரைந்து உடல்நலம் பெற நாமும் பிராத்திப்போம்.. Youtube Video Code Embed Credits: Thanthi Tv

தமிழ் திரையுலகில் பன்முகத் திறமையாளராக வலம் வந்தவர் நடிகர் டி.ராஜேந்தர். நடிகர், பாடகர், பாடலாசிரியர், வசனகர்த்தா, இயக்குனநர் என பல்வேறு பரிணாமங்களில் தன் திறமையை காட்டியவர். அது மட்டுமில்லாமல் அரசியல்வாதியாக ஒரு கலக்கு கலக்கியவர். தனது அடுக்கு மொழி எதுகை மோனை வசனத்தால் இன்றைக்கும் பேசி பலரை கவர்ந்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது. கடந்த நான்கு நாட்களாக டி.ராஜேந்தர் அவர்களின் உடல்நிலை குறித்து வரும் செய்திகள் கவலையளிப்பதாக இருந்தது. இந்த சூழ்நிலையை விளக்கி சிம்பு கொடுத்த அறிக்கை அவரது ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below video