தாலி கட்டும் நேரத்தில் கழன்று விழுந்த விக்..திருமணத்தை நிறுத்திய மணப்பெண் | U.P

இன்றைய தேதியில் முடி கொட்டுதல் பிரச்சினை இல்லாத ஆளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இளம் வயதிலேயே பலரும் இந்த பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே கவலை திருமணம் வரையாவது முடி இருக்க வேண்டும் என்பதுதான். அப்படியே முடியை இழந்தவர்கள் விக், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் பலவிதாமான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அப்படி ஒரு சம்பவம்தான் உ.பியில் நடந்துள்ளது. திருமணத்தன்று மாப்பிள்ளையின் விக் கழன்று விழுந்த செய்தியை கேட்ட மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாலி கட்டும் நேரத்தில் கழன்று விழுந்த விக்..திருமணத்தை நிறுத்திய மணப்பெண் | U.P 1
உத்திரபிரதேசம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்தவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடக்கவிருந்தது.
அப்போது மாப்பிள்ளையை ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர். வெயில் சற்று அதிகமாக இருந்த காரணத்தால் மாப்பிள்ளைக்கு மயக்கம் ஏற்படவே அவர் சுருண்டு கீழே விழுந்துள்ளார். அப்போது அவரின் தலையில் வைத்து இருந்த விக் கழன்று விழுந்துள்ளது. இந்த செய்தியைக் கேட்ட மணமகள் இந்த திருமணம் வேண்டாம் என்று திருமணத்தை பாதிலேயே நிறுத்தியுள்ளார். பிரச்சினை காவல் நிலையம் வரை சென்றது. Embed credits: Sun news

விளம்பரம்

தாலி கட்டும் நேரத்தில் கழன்று விழுந்த விக்..திருமணத்தை நிறுத்திய மணப்பெண் | U.P 3

போலீசாரும், மணப்பெண் வீட்டாரும் பெண்ணிடம் எவ்வளவு முயன்று பார்த்தும் அந்த பெண் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். முன்பே மாப்பிள்ளைக்கு முடி இல்லை என்ற விஷயத்தைக் கூறி இருந்தால் அதற்கு ஏற்றார் போல் பெண்ணிடம் எடுத்துக் கூறி திருமணத்திற்கு தயார் செய்து இருப்போம் என்று பெண் வீட்டார் கூறினர். ஆனால் விக் இருப்பதை மறைத்ததால் திருமணம் நின்று போனதோடு மட்டுமில்லாமல் பெண்ணின் வீட்டார் செய்த 5 லட்சம் ரூபாயும் மாப்பிள்ளை வீட்டார் தர சம்மதித்து இந்த பிரச்சினையை முடித்து வைத்துள்ளனர். திருமணமும் நடக்காமல், 5 லட்ச ரூபாயும் வீணாகி போனது..எல்லாம் இந்த பாழாய் போன விக்கால்..அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below Video..

விளம்பரம்
தொடர்புடையவை  அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி..செய்தியாளர்கள் சந்திப்பில் கோபப்பட்டு கத்திய கூல் சுரேஷ்

விளம்பரம்

Leave a Comment